ஹைதராபாத்:நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து இந்திய தேசிய விதைக் கழகத்தின் இயக்குநர் இந்திர சேகர் சிங் ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
அதில், "நிர்மலா சீதாராமன் 'வளர்ச்சியின் முதல் இயந்திரமாக விவசாயத்தை' வைத்துள்ளது மனதைத் தொடும் வகையில் உள்ளதாகவும், கிராமப்புற கடன் முதல் வருமான வீழ்ச்சி வரை என பல்வேறு பிரச்சனைகளுக்காக இந்திய விவசாயம் போராடி வருகிறது. இந்நிலையில் அமைச்சரின் பட்ஜெட் பட்டியலில் விவசாயம் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது" எனவும் இந்திர சேகர் சிங் தெரிவித்துள்ளார்.
தன்-தான்ய கிரிஷி யோஜனா திட்டம்:
மேலும், "அமைச்சரின் உரையின் போது 2025 -2026ஆம் ஆண்டிற்கான அரசின் நோக்கமும், வேளாண் திட்டமும் தெளிவாகியுள்ளது. இதில் நிதியமைச்சர் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும், முந்தைய திட்டங்களுக்கு கூடுதல் நிதியையும் வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த நடவடிக்கையும் அரசின் தொலைநோக்கு பார்வையைக் குறிக்கிறது. அதாவது, புதிய பட்ஜெட் பட்டியலில், முதலில் பிரதம மந்திரியின் தன்-தான்ய கிரிஷி யோஜனா (PM Dhan-Dhaanya Krishi Yojana) திட்டம் இருந்தது. இதில், குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த கடன் அளவு மற்றும் மிதமான பயிர் தீவிரம் கொண்ட 100 மாவட்டங்களில் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களின் வளர்ச்சி:
இதற்கான பொருள், அரசாங்கம் பசுமைப் புரட்சி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படாத பகுதிகளில் கவனம் செலுத்துகிறது என்பதாகும். பொதுவாக, தொலைதூரப் பகுதிகளில் (Remote areas) குறைந்த அளவு விளைச்சலே இருக்கும் மற்றும் குறைவான கிராமப்புற கடனையே பெறுகின்றனர். பசுமைப் புரட்சி தொழில்நுட்பம் இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது தண்ணீர் பிரச்சினைகள் காரணமாக, முழு திறனையும் பயன்படுத்த முடியாத மழைநீர் சார்ந்த பகுதிகளும் (Rain-fed areas) இதில் அடங்கும்.
நீர்ப்பாசனத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நீண்ட மற்றும் குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்கவும், அதேநேரத்தில் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் விரும்புகிறது. இந்த திட்டம் 1.7 கோடி விவசாயிகளைச் சென்றடைய நமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பலதரப்பட்ட வங்கிகளில் நிதியுதவி:
வேளாண்மையில் நிதியமைச்சர் தாக்கல் செய்த இரண்டாவது முக்கிய கருப்பொருள், 'கிராமப்புறங்களின் செழிப்பு மற்றும் மீள்தன்மையை' உருவாக்குதல். இதன் கருப்பொருள் 'நாட்டில் இடப்பெயர்வு ஒரு விருப்பமாக மாறவேண்டுமே தவிர, ஒரு தேவையாக இருக்கக்கூடாது' என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இது, திறன் மேம்பாடு, முதலீடுகள், விவசாயத்தில் புதிய உலகளாவிய தொழில்நுட்பங்களை விவசாயிகளின் வயல்களுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றின் மூலம் கிராமப்புறத் துறையை மேம்படுத்தும் எனப் பன்முக அணுகுமுறையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், வேளாண்மையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வங்கிகளின் உதவியுடன் நிதி உருவாக்கப்படும்.
தாமரை விதையின் உற்பத்தி அதிகரிப்பு:
புதிய உணவு போக்கைக் கவனத்தில் கொண்டு, பீகாரில் மகானா வாரியத்தை (Makhana Board) உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு தாமரை விதையின் உற்பத்தியை மேம்படுத்தவும், பதப்படுத்துதல், மதிப்பை கூட்டுதல் மற்றும் சந்தை படுத்துதலை மேம்படுத்த உதவும். இதற்காக FPO பதாகையின் கீழ், உற்பத்தியாளர்களை ஒழுங்கமைக்க ஒரு சிறப்பு அழைப்பு உள்ளது. அது ஒழுங்கமைக்கப்பட்டவுடன், உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை அரசு வழங்கும் என நம்பலாம்.
கிசான் கிரெடிட் கார்டு: