தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மொறு மொறு தேங்காய் பால் முறுக்கை இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ!

இந்த தீபாவளிக்கு எப்போதும் போல சாதாரண முறுக்கை செய்யாமல் அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த தேங்காய் பால் முறுக்கை செய்து அசத்துங்கள்...எப்படி செய்வது என இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : 5 hours ago

என்ன தான் வகை வகையாக முறுக்கு சாப்பிட்டு இருந்தாலும், தேங்காய் பால் முறுக்கிற்கு இருக்கும் மவுசு தனி தான். கடைகளில் இருந்து நாம் வாங்கிட்டு வரும் பாக்கெட் ஒரு நாளுக்கு மேல் தாக்குபிடிப்பதே கடினம் என்றால் மிகையாகாது. இப்படி, சூப்பரான ருசியில் இருக்கும் தேங்காய் பால் முறுக்கை வீட்டில் செய்தால் என்ன? அதுவும் இந்த தீபாவளிக்கு செய்தால் மனத்திற்கும் நாவிற்கும் ஒரே குஷி தான்..தேங்காய் பால் முறுக்கை செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 4 கப்
  • வெள்ளை உளுந்து - 1 கப்
  • இட்லி அரிசி - 2 டீஸ்பூன்
  • கருப்பு எள்- 2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
  • தேங்காய் பால் - 1 கப்
  • உருக்கிய வெண்ணெய் - 50 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

தேங்காய் பால் முறுக்கு செய்முறை:

  • முறுக்கு செய்வதற்கு, முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுந்தை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் (உளுந்து சூடாகினால் மட்டும் போதும்,நிறம் மாற கூடாது)
  • அதன் பின், கடாயில் இட்லி அரிசியை போட்டு அதிக வெப்பத்தில் பொரிய வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், பொரிக்கடலையை அதே கடாயில் லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • இப்போது இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு பொடியாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு அகல பாத்திரத்தில், அரிசி மாவு, நாம் அரைத்து வைத்த பொடி, எள் விதைகள், வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
  • இந்த கலவையுடன் தேங்காய் பாலை சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். (தேங்காய் அளவு சற்று குறைவாக இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையுங்கள்)
  • இறுதியாக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதற்கிடையில் நாம் பிசைந்து வைத்த மாவை முறுக்கு குழாயில் சேர்த்து பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நேரடியாக எண்ணெய்யில் பிழிந்தாலும் சரி.
  • இப்போது முறுக்கை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அனைவருக்கும் இஷ்டமான தேங்காய் பால் முறுக்கி ரெடி..இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்!

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details