புதுடெல்லி:ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகியில் இரண்டாம் உலகப்போர் அணு குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டோருக்காக தொடங்கப்பட்ட ஜப்பான் குழுவான நிஹான் ஹிதாங்கியோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் நிறுவனம் வெளியிட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசு பெறும் அமைப்பை பற்றிய குறிப்பில், அமைதியை வலியுறுத்தும் புறா சின்னம் கொண்ட அந்த அமைப்பின் லோகோ ஓவியமாக வெளியிடப்பட்டிருந்தது.
நோபல் பரிசு பெறுவோரின் ஓவியங்கள்:இது நிஹான் ஹிதாங்கியோ அமைப்பின் ஒரிஜினல் லோகோ அல்ல. நிஹான் ஹிதாங்கியோ குழுவின் இணையதளத்தில் உள்ள லோகோவில் நிஹான் ஹிதாங்கியோ என்பது ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழியில் இடம் பெற்றுள்ளது. மேலும் அதன் துணை குறிப்பாக "ஏ- மற்றும் எச்-குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கான ஜப்பான் கூட்டமைப்பு" என ஜப்பான் மொழியில் கூறப்பட்டுள்ளது. எனினும் நோபல் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த அமைப்பின் ஓவியம் வெறுமனே கருப்பு கோடுகள், தங்க நிறுத்திலான சிறு கோடுகளுடன் கூடிய புறா ஓவியமாக இடம் பெற்றுள்ளது.
இவ்வாறே, பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு பெற்ற பிறரது ஓவியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகியவற்றுக்கான பிரிவுகளில் நோபல் பரிசு பெற்றவர்களின் உருவங்களைக் கொண்ட ஓவியங்களும் நோபல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு நிக்லாஸ் எல்மேஹெட் என்பவர், நோபல் ஊடகத்தின் ஓவியம் வரைவதற்காக ஈடுபடுத்தப்பட்டார். நோபல் பரிசுகள் தொடர்பான காட்சி ரீதியான படைப்புகளுக்கு இவரே பொறுப்பாளராவார்.
நோபல் பரிசு இணையதளத்தில் உள்ள தகவலின்படி நோபல் பரிசு பெறுவர்களின் உருவங்களை ஓவியங்களாக கொடுப்பது என்பது ஒரே மாதிரியாக , வரவேற்கதக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் போன்ற சிறிய வடிவத்திலும் நன்றாக தோற்றமளிக்கும். ஆனால், 2012க்கு முன்பு வரை இதுபோன்ற முறை இல்லை.
தொடக்கத்தில் புகைப்படங்கள் இடம் பெற்றன:1901ஆம் ஆண்டு நோபல் பரிசு தொடங்கப்பட்டபோது பரிசு பெற்றவர்களுடைய அவர்களின் வழக்கமான உருவ புகைப்படங்கள் இடம் பெற்றன. இந்த புகைப்படங்களை பெரும்பாலும் விருது பெறுபவர்களே நோபல் நிறுவனத்துக்கு கொடுத்ததாக இருக்கும். இத்தகைய புகைப்படங்கள்தான் அதிகாரப்பூர்வமான நோபல் பரிசு அறிவுப்புகள், ஆவணங்களில் இடம் பெற்றன. எனவே, இத்தகைய புகைப்படங்கள் பெரும்பாலும் பரிசு பெறுவோரின் பின்னணியில், காலகட்டத்தில், அப்போதைக்கு இருந்த தொழில்நுட்பத்தின் தரத்தில் ஒவ்வொன்றும் வித்தியாமாக இருந்தன.
எனினும், இந்த தொடக்க காலகட்டத்தில், சில குறிப்பிட்ட நோபல் பரிசு பெற்றவர்களது, உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டன. குறிப்பாக இவை நோபல் பரிசு நிறுவனத்தின் விழாக்கள் மற்றும் அமைப்பு ரீதியான கண்காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இத்தகைய ஓவிய பிரதிநித்துவம் என்பது மிகவும் பழமையானதாக, உள்ளூர் அல்லது பிராந்திய அளவிலான ஓவிய கலைஞர்களால் உருவாகப்பட்டதாக இருந்தது. இப்போதைய காலகட்டத்தின் நவீன ஓவியங்களை விடவும் தரத்தில் பின்தங்கியே இருந்தன.
இந்த காலகட்டத்தில் ஒரே ஓவிய கலைஞர் அல்லது ஒரே மாதிரியிலான பாணியை பிரதிபலிக்கும் ஓவியத்தை வரைவது என்பது நோபல் பரிசு அமைப்பால் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பெரும்பாலும், நடைமுறை சாத்தியமான புகைப்படங்களை பிரநிதித்துவப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தரமான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன :20ஆம் நூற்றாண்டின் மத்தியில், நோபல் பரிசு பெறுவோரின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதே வழக்கத்தில் இருந்தது. எனினும் காட்சி ரீதியிலான முறை மேலும் முறைப்படுத்தப்பட்டது. புகைப்படங்களைப் பிரசுரிப்பதில், புகைப்படங்களில் தரநிலை கடைபிடிக்கப்பட்டது. பரிசு பெறுவோரின் புகைப்படங்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளை அல்லது வண்ணத்தில் இடம் பெறுகின்றன. மேலும் விருதின் தீவிரத்தன்மை பொறுத்து முறையான மற்றும் அந்த தருணத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க:மருத்துவக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள்! ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது என்ன?
கண்காட்சிகள் அல்லது நோபல் பரிசுடன் தொடர்புடைய அமைப்புகளில் காட்சி படுத்துதல் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் குறிப்பிட்ட விருது பெறுவோருக்காக ஓவியங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் ஓவியம், புகைப்படம் என கலவையான முறைகளில் விருதுபெறுவோரின் படங்கள் வெளியாயின. அதில் புகைப்படம் என்பது மேலும் எளிதாகவும் டிஜிட்டல் வடிவில் மறு உருவாக்கம் செய்வது தொடக்க கட்டத்திலும் இருந்தது.
வித்தியாசமான சூழல்களில் ஓவியங்கள் முன்னெடுப்பு:சில நிகழ்வுகளில் நோபல் பரிசு பெறும் தனிநபர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளாதவர்களாகவோ அல்லது உயர் தரமனான புகைப்படங்கள் அல்லது பொதுவான புகைப்படம் உடனடியாக கிடைக்கப்பெறாத சூழலும் இருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தனிநபர்கள் அவர்களின் தீவிரமான பணித்தன்மையைப் பொறுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது தனிப்பட்ட புகைப்படங்கள் பெரும் அளவில் பரவுவதை விரும்ப மாட்டார்கள். இது போன்ற தருணங்களில் அவர்களின் ஓவியங்கள் அவர்களை கவுரவப்படுத்துவதாகவும் பிரதிநித்துவப்படுத்துவதாகவும் இருந்தன.
நிக்லாஸ் எல்மேஹெட் வரைந்த இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற தென் கொரிய எழுத்தாளர் ஹேன் காங் ஓவியம் (Image Credits -Nobel Prize Website) மேலும் ஒரே மாதிரியான படங்கள் என்ற பாணியிலான முறையை நோக்கி செல்வது டிஜிட்டல் தளங்களின் தேவைக்கு ஏற்றதாக ஊக்கப்படுத்தக் கூடியதாக, அனைத்து வகையான விருதுபெறுவோரின் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படங்களை நோக்கிய மாற்றத்தின் தொடக்கமாக இருந்தது. எனினும், ஒரே ஒரு கலைஞர் பொறுப்பில் இது மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு விதமான அணுமுறையுடன் கூடிய படங்கள் தொடர்ந்து வெளியாயின.
ஓவிய முறை நடைமுறைக்கு வந்தது :நோபல் பரிசு பெறுவோரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவிய கலைவடிவிலான பட முறை 2010களில் நடைமுறைக்கு வந்தது. சுவீடன் ஓவிய கலைஞர் நிக்லாஸ் எல்மேஹெட் என்பவர் நோபல் பரிசு பெறுவோரின் படங்களை அதிகாரப்பூர்வமாக வரைவதற்காக ஈடுபடுத்தப்பட்டார். புகைப்படத்தை சார்ந்த முந்தைய காலகட்டத்தில் இருந்து நோபல் பரிசு பெறுவோரின் உருவப்படங்களை புதிய யுகத்துக்கு எடுத்துச் செல்வதில் நிக்லாஸ் எல்மேஹெட்டின் பணி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
இந்த பணி குறித்து தமது தனிப்பட்ட இணையதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நிக்லாஸ் எல்மேஹெட், "2012ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பில் இடம் பெற்றவர்களின் காட்சி ஊடகங்களை உருவாக்க நோபல் ஊடகத்தின் சார்பில் ஆர்ட் டைரக்டராக ஈடுபடுத்தப்பட்டேன். அந்த ஆண்டு கருப்பு மார்க்கரை பயன்படுத்தி படங்களை வரைந்தேன். இதனால் விருது பெற்ற சிலரின் புகைப்படங்கள் நோபல் பரிசு இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. சில ஓவியங்கள் பெரிய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக உருவப்படங்களை உருவாக்கும் பணி எனக்கு கிடைத்தது. கருப்பு வண்ண வெளிபுற கோடுகளுடன் நீலம், மஞ்சள் வண்ணங்களையும் பயன்படுத்தி படங்களை வரைகின்றேன். நோபல் பரிசு குறித்த அறிவுப்புகளில் ஊடகங்களில் இந்த ஓவியங்கள் சிறப்பாக ஒளிபரப்பட்டன. எனினும் 2017ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பில் வெளியிடப்படும் படங்களின் முக்கியமான வண்ணம் என்பது தங்க நிறத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றபடி நான் படங்களின் வண்ணத்தில் மாற்றம் மேற்கொண்டேன். நோபல் பரிசு பெறுவோரின் படங்களை நான் வரைந்தபோதும், நோபல் பரிசு பெறுவோரிடம் இருந்து எந்தவித பின்னூட்டங்களையும் நான் பெறவில்லை. நோபல் பரிசு பெற்றவுடன் அவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள் ஆகிவிடுவதால் இதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இருந்திருக்காது," என்றார்.