பப்பாளி பல்வேறு ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாப்பதோடு சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. பப்பாளியை வைத்து செய்யப்படும் ஃபேஸ் பேக்குகள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துகின்றன.
அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ தோல் சுருக்கம், மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில், பப்பாளி பழத்தை வைத்து சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும் ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே எப்படி செய்வது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
கோப்புப்படம் (Credit - ETVBharat) பப்பாளி மற்றும் தயிர்: ஒரு துண்டு பழுத்த பப்பாளியை நன்கு மசித்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பின்னர், இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தை சுத்தப்படுத்துவதோடு, மென்மையாக மாற்றுகிறது.
பப்பாளி மற்றும் எலுமிச்சை பழ சாறு: பழுத்த பப்பாளியை நன்கு மசித்து. அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழ சாறு சேர்க்க வேண்டும். தயார் செய்து வைத்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு பின் கழுவினால், சருமம் இன்ஸ்டண்ட் பொலிவாக மாறும்.
பப்பாளி மற்றும் தேன்: ஒரு கிண்ணத்தில் பழுத்த பப்பாளியை மசித்து, அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்க்கவும் கலந்து விடவும். பின்னர், இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை இதை பயன்படுத்தி வர, சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். NCBI ஆய்வின் படி, தீக்காயங்கள், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு தேன் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் (Credit - ETVBharat) பப்பாளி மற்றும் அரிசி மாவு: ஒரு துண்டு பழுத்த பப்பாளியை மசித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு உடனடி பொலிவை தரும்.
இதையும் படிங்க:30 வயதில் தோல் சுருக்கம் பற்றிய பயமா? 20 வயதில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.