தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

10 நிமிடத்தில் ரெடியாகும் மிளகாய் கிள்ளி சாம்பார்..டிபன் மற்றும் சாதத்திற்கு பர்ஃபெக்ட் காம்பினேஷன்! - KILLI POTTA SAMBAR RECIPE IN TAMIL

எப்போதும் இட்லி தோசைக்கு ஒரே மாதிரியான சாம்பார் செய்து அலுத்து விட்டதா?, ஒரு முறை மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்து பாருங்கள். இட்லி, தோசை முதல் சாதத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 5, 2024, 1:50 PM IST

உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்படியானால், மிகவும் சிம்பிள் மற்றும் சுவையாக இருக்கு மிளகாய் கிள்ளி சாம்பார் ட்ரை பண்ணி பாருங்கள். காலை டிபன் மற்றும் மதியம் சாதத்திற்கும் வைத்தும் சாப்பிடலாம். மிளகாய் கிள்ளி சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு - 1 கப்
  • பூண்டு - 4 பல்
  • பச்சை மிளகாய் - 5
  • தக்காளி - 2
  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 5
  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 5
  • பெரிய வெங்காயம் - 1
  • உப்பு - தேவையான அளவு
  • புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு
  • தண்ணீர் - 1 கப்

கிள்ளி போட்ட சாம்பார் செய்முறை:

  • முதலில், குக்கரில் கழுவி வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன்,சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கி வைத்த தக்காளி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • பருப்பு பொங்கி வராமல் இருப்பதற்கு 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விடவும். அதன் பின்னர், மத்து அல்லது விஸ்க்கர் வைத்து பருப்பை நன்கு மசித்து விடுங்கள்.
  • இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து பொரிந்து வந்ததும், காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சேர்க்கவும். அதன் பின்னர், நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  • அடுத்ததாக, தண்ணீர் மற்றும் கரைத்து வைத்த புளி சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் மசித்து வைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் கிள்ளி போட்ட சாம்பார் ரெடி.

ABOUT THE AUTHOR

...view details