கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றி விட்டீர்களா? கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றிய அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்காக இருக்கிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்து அகல் விளக்கை சுத்தம் செய்து பாருங்கள். எண்ணெய் பிசுக்கு நீங்கி, கடையில் இருந்து வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.
- கல் உப்பு:ஒரு தேக்கரண்டி கல் உப்புடன் மூன்று தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், இதை அகல் விளக்கின் அனைத்து பகுதிகளில் நன்கு படுகிற அளவிற்கு தடவி 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள். பின்னர், இந்த விளக்குகளை தண்ணீரில் கழுவி காட்டன் துணியை பயன்படுத்தி துடைத்து எடுத்தால் விளக்கில் உள்ள கறைகள் எல்லாம் நீங்கி இருப்பதை பார்க்க முடியும்.
- டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் வினிகர்:அகல் விளக்குகளில் உள்ள தூசி மற்றும் கிரீஸ் நீங்குவதற்கு, 1 கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் டிடெர்ஜெண்ட் பவுடர் மற்றும் ஒன்றரை டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலக்கவும். பின்னர், ஒரு டூத் பிரஷை பயன்படுத்தி விளக்குகள் மீது தடவி லேசாக தேய்த்து வர விளக்கு புதியது போலாகிவிடும்.
- எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா:விளக்குகளை அணைத்த பின்னர், முதலில் டிஸ்யூ பேப்பரை பயன்படுத்திவிளக்குகளை நன்றாக துடைக்கவும். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர், அதில் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், ஒரு எழும்பிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழத்தின் தோலையும் கொதிக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுங்கள்.
இப்போது, அகல் விளக்குகளை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். (தண்ணீர் கொதிக்கும் போதே விளக்கில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு பிரிந்து வருவது தெரியும்). இப்போது, இந்த பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு ஒதுக்கி வைத்து விடுங்கள்.