தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கேரளா பெண்களை போல முடி வளர வேண்டுமா?வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்-ஐ தேய்த்தால் கரு கரு முடி நிச்சயம்!!

அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல் வளர்க்க ஆசையா? என்ன எண்ணெய் தேய்தாலும் முடி கொட்டுவது நிற்க வில்லையா? டக்குனு இந்த எண்ணெய்யை வீட்டில் தயார் செய்து தேய்த்து பாருங்கள், 15 நாட்களில் பலன் பெறலாம்..!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 22, 2024, 5:27 PM IST

ஆண், பெண் என பாலினம் பாராமல் அனைவருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது கருமையான மற்றும் அடர்த்தியான முடி வளர்க்க வேண்டும் என்பது தான். அதற்காக, வகை வகையான எண்ணெய், வித விதமான ஹேர் பேக் என அனைத்தையும் செய்தாலும் முடியோ, நீ சொல்வதை நான் ஏன் கேக்கனும் என்பதற்கு ஏற்றார் போல கொட்டிக்கொண்டே இருக்கிறது.

இதற்கு தீர்வே இல்லையா? என்றால்..கண்டிப்பாக இருக்கிறது. மூலிகை பொருட்களை வைத்து வீட்டில் தயார் செய்யப்படும் இந்த எண்ணெய் அனைத்து முடி பிரச்சனைகளையும் 15 நாட்களில் சீராக்குகிறது. அந்த எண்ணெய்யை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை - 5 துண்டு
  • நெல்லிக்காய் - 3
  • சின்ன வெங்காயம் -15
  • கரிசலாங்கண்ணி கீரை/பொடி - 1 கைப்புடி/1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பில்லை - 1 கைப்பிடி
  • மருதாணி இலை - 1 கைப்பிடி
  • கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை:

  • எண்ணெய் காய்ச்சுவதற்கு முன்னதாக, கற்றாழை, நெல்லிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்‌ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  • எண்ணெய் நன்றாக சூடாகியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் அரைத்து வைத்த கலவையை சேர்க்கவும். இந்த கலவை எண்ணெயில் நன்றாக பொரிந்த பின்னர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.(இலைகளை தீயில் போடும் போது அடுப்பு சிம்மில் இருப்பதை உறுதி செய்யவும்)
  • கறிவேப்பிலை நன்றாக நிறம் மாறியதும், மருதாணி இலையை சேர்க்கவும். மருதாணி நிறம் மாறி எண்ணெயின் சலசலப்பு அடங்கிய பின்னர் கரிசலாங்கண்ணி கீரையை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். (பொடி சேர்ப்பதாக இருந்தால், அதை கடைசியாக சேர்க்க வேண்டும். பொடி வேகமாக கருகி விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)
  • இறுதியாக கருஞ்சீரகத்தை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெயின் சூடு ஆறும் வரை தனியாக வைக்க வேண்டும்.
  • எண்ணெய் நன்றாக ஆறியதும் துணியை வைத்து வடிக்கட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், நாம் தேங்காய் எண்ணெய் எடுத்த அளவில் கால் பங்கு அளவு விளக்கெண்ணெய்யை கலந்து கொள்ளவும்.

இதையும் படிங்க:சருமப் பிரச்சினை எதுவா இருந்தாலும் இது ஒன்னு மட்டும் போதுமே.. ட்ரை பண்ணி பாருங்க.. சும்மா அசந்துருவீங்க!

பயன்படுத்துவது எப்படி:

  • தினசரி தலையில் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக இந்த எண்ணெய்யை பயன் படுத்தலாம்
  • கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு நேரம் இல்லை என்றால் கண்டிப்பாக தலையில் வாரத்திற்கு மூன்று முறையாவது இந்த எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.
  • வாரத்திற்கு இரண்டு முறை நன்றாக எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பின்னர் சாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கலாம்.

பயன்கள் என்னென்ன?:

  1. 15 நாட்களில் முடி உதிர்வை தடுக்கலாம்
  2. பொடுகு தொல்லை நீங்கிவிடும்
  3. இளநரை மறைந்து கருமையாக மாறும்
  4. முடி வேகமாகவும் , அடர்த்தியாகவும் வளரும்

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details