தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உங்கள் வீட்டு Electric Kettle பழுதடைந்து கிடைக்கிறதா? அப்ப, இது தான் காரணம்!

எலக்ட்ரிக் கெட்டில் நீண்ட காலங்களுக்கு செயல்திறனுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி சுத்தம் செய்வது? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்..

By ETV Bharat Lifestyle Team

Published : 5 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

பலர் சமையலறையில் தண்ணீரை சூடாக்குவதற்கும், கல்லூரி மாணவர்கள் முட்டை, நூடுல்ஸ் சமைப்பதற்கும், டீ,காபி போடுவதற்கும் என வெவ்வேறு வழிகளில் எலக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் நமது இஷ்டத்திற்கு கெட்டிலை பயன்படுத்துவது, சுத்தம் செய்வதில் அக்கறை காட்டாமல் இருப்பது போன்ற செயல்களால், விரைவில் கெட்டில் பழுதடைந்துவிடுகின்றன.

இந்த சூழ்நிலையில், உங்கள் வீட்டில் உள்ள கெட்டிலை நீண்ட காலங்களுக்கு பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்..

தண்ணீரை முழுவதுமாக நிரப்ப வேண்டாம்: வெந்நீர் தேவைபடும் போது சிலர் கெட்டிலில் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி சூடாக்குகிறார்கள். இப்படி செய்வது தவறு. கொட்டிலில் ஒருபோதும் தண்ணீரை முழுமையாக நிரப்பக்கூடாது. காரணம், தண்ணீர் சூடாகி கொதிக்கும் போது வெளியேறும் அபாயம் உள்ளது. பின்னர், இந்த தண்ணீர் மெஷினுக்குள் செல்வதால் கெட்டிலின் செயல்திறன் பாதிக்கப்படும். எனவே, கெட்டிலின் உட்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் தண்ணீர் அளவை பின்பற்றி பயன்படுத்தவும்.

காலியாக வைத்திருங்கள்: கெட்டிலில் தண்ணீரைச் சூடாக்கி, தேவைப்படும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, மீதமான தண்ணீரை சிலர் கெட்டிலில் வைத்துவிடுவார்கள். இப்படிச் செய்வதால் கெட்டிலின் உட்புறத்தில் சுண்ணாம்பு போன்ற வெள்ளை நிற அடுக்கு குவிந்துவிடும். இதன் விளைவாக, கெட்டிலின் ஆயுள் மற்றும் செயல்திறன் படிப்படியாக குறைகிறது. எனவே, கெட்டில் நீண்ட காலம் வேலை செய்ய, தண்ணீரை சூடாக்கியதும் ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு ஸ்டீல் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி வைக்கவும். கெட்டிலை காலியாக வைத்திருப்பது நல்லது.

கெட்டிலில் தண்ணீரை சேகரித்து வைக்கக்கூடாது (Credit - Getty Images)

இப்படி சுத்தம் செய்யுங்கள்:பெரும்பாலானவர்கள் கெட்டிலை குழாய் தண்ணீருக்கு அடியில் தான் கழுவுவார்கள். இப்படி கழுவுவதால் மேற்பரப்பு மட்டும் சுத்தமாகி, உட்புறத்தில் இருந்து துர்நாற்றம் வர தொடங்குகிறது. எனவே, இந்த முறை உங்கள் வீட்டில் உள்ள கெட்டிலை இப்படி சுத்தம் செய்யுங்கள்.

அதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கொள்ளவும். இதை பாதியளவு கெட்டிலில் நிரப்பி கொதிக்க வைக்கவும். பின்னர், அணைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன் பின்னர் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தால் சுத்தமாகிவிடும்.

ஆனால் இங்கு இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். கெட்டிலின் வெளிப்புறத்தை குழாயின் அடியில் கழுவுவதற்கு பதிலாக சுத்தமான ஈரத்துணியால் துடைத்தால் போதும். இல்லையெனில், கெட்டிலின் அடியில் உள்ள இயந்திரத்தில் தண்ணீர் புகுந்து கெட்டில் விரைவில் செயல்திறனை இழக்கும் அபாயம் உள்ளது.

கவனம் தேவை:தற்போது மார்க்கெட்டில் பல வகையான கெட்டில்கள் கிடைக்கின்றன. இருப்பினும், சில தண்ணீரை சூடாக்க அல்லது பாலை சூடாக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. கெட்டில் நீண்ட காலங்களுக்கு நன்றாக வேலை செய்ய பேக்கேஜிங் லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது. மேலும், குழந்தைகளுக்கு எட்டாத வகையில் கெட்டிலை வைக்க வேண்டும்.

இதையும் படிங்க:பாத்ரூம் குழாய்கள் மீதுள்ள கறைகள் போகவே மாட்டேங்குதா?..டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details