தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 'பிளம் கேக்'..டக்குனு ஈஸியா இப்படி செய்யணும்! - PLUM CAKE RECIPE

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே எளிமையாக எப்படி பிளம் கேக் (Plum cake) செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Lifestyle Team

Published : 11 hours ago

இந்த ஆண்டு முடிவதற்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீட்டிலேயே ஈஸியாக மற்றும் சுவையாக செய்யக்கூடிய இந்த கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் செய்து பாருங்கள். யம்மியான பிளம் கேக் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை - 3/4 கப்
  • ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
  • துருவிய ஆரஞ்சு தோல் - 1 டீஸ்பூன்
  • ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன்
  • டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப்
  • ஜெரி - 1/2 கப்
  • பேரீச்சம்பழம் - 1/4 கப்
  • முந்திரி, பாதாம் - 1/2 கப்
  • உலர் திராட்சை - 1/2 கப்
  • மைதா மாவு - 3 டீஸ்பூன்

கேக் பேட்டர் செய்ய தேவையான பொருட்கள்:

  • முட்டை - 3
  • சர்க்கரை - 1/2 கப்
  • எண்ணெய் - 1/4 கப்
  • வெண்ணெய் - 1/4 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை
  • ஜாதிக்காய் - 1 சிட்டிகை
  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்
  • மைதா மாவு - 1 1/2 கப்
  • பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்

Plum கேக் செய்முறை:

  1. அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து, சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும். சர்க்கரை நன்கு கரைந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்.
  2. பின்னர், அதனுடன் அரை கப் சூடான தண்ணீர் சேர்த்து மீண்டும் அடுப்பை ஆன் செய்து 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  3. சர்க்கரை பாகு தயாரனதும், இதிலிருந்து பாதியை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள பாகில் ஆரஞ்சு ஜூஸ், துருவி வைத்த ஆரஞ்சு தோல் சேர்த்து கலக்கவும்.
  4. அடுத்ததாக ஃப்ரூட் ஜாம் சேர்த்து, கலந்து விடவும். பின்னர், டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை, பொடியாக நறுக்கி வைத்த ஜெரி,பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம் சேர்த்து அடுப்பை ஹைய் பிளேமில் வைத்து கலந்து விடவும்.
  5. பாகு வற்றி நன்கு கெட்டியாக மாறியதும், அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். இப்போது இதில் சூடு நன்கு ஆறியதும், மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்து விடுங்கள்.
  6. இப்போது, காய்ந்த மிக்ஸி ஜாரில், முட்டை, எண்ணெய், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பின்னர், இதில், நாம் தனியாக எடுத்து வைத்த சர்க்கரை பாகை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
  7. அடுத்ததாக, அரைத்து வைத்ததை நட்ஸ் இருக்கும் பாத்திரத்தில் சேர்த்து விஸ்க் வைத்து கலந்து விடுங்கள். அதன் பின், ஜாதிக்காயை துருவி சேர்க்கவும். அடுத்ததாக, ஏலக்காய் தூள், பட்டை தூள் சேர்க்கவும். இப்போது, இந்த பாத்திரம் மீது சல்லடை வைத்து, அதில், மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து விஸ்க் வைத்து கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
  8. அடுத்ததாக, கேக் ட்ரேயில் பட்டர் அல்லது எண்ணெய் தடவி, பட்டர் சீட் போட்டுக்கொள்ளவும். பின்னர், அதில் நாம் செய்து வைத்துள்ள கேக் பேட்டரை சேர்க்கவும்.
  9. 190 டிகிரி செல்ஸியசில் 10 நிமிடத்திற்கு ஓவனை ஃப்ரீ ஹீட் செய்யவும். பின்னர், 170 டிகிரி செல்ஸியசில் 1 மணி நேரத்திற்கு கேக்கை பேக் செய்து எடுத்தால் சுவையான கேக் ரெடி. அப்புறம் என்ன, இந்த கிறிஸ்துமஸ்க்கு இந்த கேக் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.

இதையும் படிங்க:

வீட்டிலேயே டேஸ்டியான 'Brownie' எப்படி செய்வது என பார்ப்போமா? சரியான அளவீடுகள் இதோ!

ABOUT THE AUTHOR

...view details