எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்துள்ள கோவக்காயை, பொரியல், குழம்பு என செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த முறை கோவக்காய்யை பயன்படுத்தி, காரசாரமான 'ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பச்சடி' செய்து பாருங்கள்..ருசிக்கு ருசி..ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம் நிச்சயம்!
தேவையான பொருட்கள்:
- கோவக்காய் - 1/4 கிலோ
- வேர்க்கடலை - கால் கப்
- பச்சை மிளகாய் - 10
- பூண்டு பல் - 6
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- புளி - எலுமிச்சை அளவு எடுத்துக் கொள்ளவும்
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- சுவைக்கு உப்பு
- கொத்தமல்லி - 1 கொத்து
- சீரகம் - டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
கோவக்காய் பச்சடி செய்வது எப்படி:
- முதலில், கோவக்காயை கழுவி நீட்டமாக நறுக்கி வைக்கவும்.
- பின்னர், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
- வேர்க்கடலை நன்கு வதங்கியதும், ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- இப்போது, அடுப்பை சிம்மில் வைத்து அதே வாணலியில் சிறிது எண்ணெய், சீரகம் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள கோவக்காய் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- இந்த கலவை வதங்கியதும், தக்காளி, புளி சேர்த்து வாணலியை மூடி10 நிமிடங்களுக்கு வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்த வேர்க்கடலை கலவை மற்றும் கோவக்காயை கலவையுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். (அம்மி இருந்தால், அதை பயன்படுத்துங்கள்).
- இறுதியாக, நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து ஒரு முறை அரைத்தால் சுவையான கோவக்காய் பச்சடி ரெடி.
- இந்த பச்சடியை சப்பாத்தி, இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சூப்பர் டேஸ்டியாக இருக்கும்.
இதையும் படிங்க:
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்