வாஷிங்டன்:நேட்டோ உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய பைடன், அடுத்ததாக தைரியம் மிக்க மற்றும் உறுதித்தன்மை கொண்ட உக்ரைன் அதிபர் புதினை மேடையில் பேச அழைப்பதாக கூறினார்.
அதன் பின் சுதாரித்துக் கொண்ட பைடன், மீண்டும் மேடை ஏறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்று மீண்டும் அழைத்தார். அமெரிக்க அதிபர் பைடனின் இந்த பேச்சால் சில விநாடிகள் ஜெலன்ஸ்கி குழப்பத்திற்கு உள்ளனார். அதேபோல், செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அதிபர் பைடன், துணை அதிபர் டிரம்ப் என்று கூறினார்.
துணை அதிபர் கமலா ஹாரீஸ் என்று சொல்வதற்கு பதிலாக துணை அதிபர் டிரம்ப் என்று பைடன் கூறியதும் சர்ச்சையை கிளப்பியது. அண்மைக் காலமாகவே அதிபர் டிரம்ப் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர் கதையாக காணப்படுகின்றன. பொது வெளியில் பேச அதிக நேரம் எடுத்துக் கொள்வது, விவாதங்களில் பேசும் போது தடுமாறுவது, அறவே தொடர்பு இல்லாமல் பேசுவது, உடல் நலன் சார்ந்து இந்த விமர்சனங்கள் பைடன் மீது உள்ளன.