வாஷிங்டன்: இந்தியர்கள் உட்பட H1B தொழிலாளர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கள் விசாக்களை உள்நாட்டிலேயே புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அடுத்த 5 வாரங்களில் 20,000 தகுதி வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் H1B விசாக்களை உள்நாட்டில் புதுப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் அதிகம் இல்லாத காரணாத்தால் அந்த பணிகளுக்காக வெளிநாட்டவர்களை தற்காலிகமாக நியமிக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாரு பணிகளுக்காக வரும் தொழிர்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அவ்வாரு வழங்கப்படும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா, குடியேற்ற உரிம இல்லாத விசா என 2 வகைகள் உள்ளன. தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். இந்த வகை விசாக்கள் H1B விசா வகையின் கீழ் வரும்.
இந்நிலையில் அமெரிக்க அரசு ஆண்டுதோரும் குறிபிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களை வழங்குகிறது. H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும். பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக இந்த வகை விசாவிற்கு விண்ணப்பிக்கின்றனர்.
இந்த விசா வழங்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும், அதன் பின்னர் விசாவை நீட்டிக்க சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்குள்ள தூதரங்கள் மூலம் விசா விசாவை நீட்டிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 3 ஆண்டுக்ளுக்கு ஒருமுறை சொந்த நாட்டிற்கு சென்று விசா புதுப்பிப்பு செய்வது பல்வேறு தரப்பினருக்கும் பெரும் பின்னடைவாக இருந்ததாக கருதப்பட்டது.
இதனிடையே ஜூன் 2023 இல், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவெளியினரிடம் உரையாடையில் H1B விசா புதுப்பிப்பை அமெரிக்காவிலேயே செய்து கொள்ளலாம், இந்த முடிவு அமெரிக்காவில் வசிக்கும், வேலை செய்யும் மற்றும் வேலை செய்ய விரும்பும் இந்திய குடிமக்களின் சுமையை குறைக்கும் என்றார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கொண்டே எச்1பி விசாவை புதுப்பிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்குள்ள தூதரங்களுக்கு சென்று எச்1பி விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.