கீவ்:உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் உணர்ச்சிகரமாக பேசிய அவர், உக்ரைனை அழிக்க ரஷ்யா விரும்பியதாகவும், ஆனால் அவர்களுக்கே அதை திரும்பி அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், ஆகஸ்ட் 6 அன்று உக்ரேனியப் படைகள் ரஷ்யாவிற்குள் நுழைந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அந்த வீடியோவை பதிவு செய்வதாகவும் அவர் கூறினார். பழிவாங்கல் என்றால் என்ன என்பதை ரஷ்யா அறிந்து கொள்ளும் என்றும் சபதம் செய்த ஜெலென்ஸ்கி, இன்று நாம் உக்ரைனின் 33வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம், எதிரி நம் நிலத்திற்கு கொண்டு வந்ததை, இப்போது அவர்களது வீட்டிற்கே திருப்பிவிடப்பட்டது என்றார்.