ல்ண்டன்:பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் நேற்று(வியாழக்கிழமை) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் எனவும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் எனவும் கணிக்கப்பட்டது.
அதன்படியே, ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் கியொ் ஸ்டாா்மரின் தொழிலாளர் கட்சி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இதனால், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அவருக்கு பின்னர் ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார். இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கோரிய சுனக்:தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், இத்தேர்தலில் போட்டியிட்ட நூற்றுக்கணக்கான கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள், ஆயிரக்கணக்கான தன்னார்வ தேர்தல் பணியாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி என்று தமது எக்ஸ் வலைதள பதிவில் சுனக் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நேபாளத்தில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? 16 ஆண்டுகளில் 13 முறை ஆட்சி கவிழ்ப்பு!