தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"அரசு அனுமதி அளித்தாலும் எங்கள் வளங்களை சூறையாடிச் செல்ல விடமாட்டோம்" - இலங்கை கடல் தொழிலாளர் சங்கம்! - Srilankan fishermen association

Fishermen Conflict: இந்திய மீனவர்கள் தாங்களாகவே உள்நோக்கத்துடன் எல்லை கடந்து வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் தலைவரும், அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரான என்.வி.சுப்பிரமணியம்
அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரான என்.வி.சுப்பிரமணியம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 10:04 PM IST

Updated : Jul 20, 2024, 10:52 PM IST

இலங்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது குறித்து அகில இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் இலங்கை யாழ்ப்பாணத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "அண்மைக்காலமாக இலங்கை கடல் பகுதியில் இந்திய இழுவை படகுகளின் (விசைப் படகுகள்) ஆக்கிரமிப்புக்கள் முன்பில்லாததை விட கூடுதலாக உள்ளதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரான என்.வி.சுப்பிரமணியம் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்திய மீனவர்களை இலங்கையில் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் இந்திய அரசு கவனம் செலுத்தவில்லை. இதில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று இந்திய மீனவர்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக தொப்புள்கொடி உறவுகளால் தொடர்ச்சியாக எங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களும், துயரங்களும், வேதனைகளுமாகவே இவற்றை நாம் பார்க்கின்றோம். புரிந்தும் புரியாதது போல் நடந்து கொண்டு, இந்தியாவில் இருந்து எங்கள் பகுதிக்குள் வந்து தாமும் துன்பத்துக்குள் சிக்கிக் கொண்டு, எங்களையும் வாழ விடாமல் துன்பத்துக்குள்ளே தள்ளுகின்றார்கள்.

நீங்கள் (இந்திய மீனவர்கள்) உங்களது கடற்பரப்பில் இருக்கின்ற மீன்களை பிடித்து வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளுங்கள். அல்லது மத்திய, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

இரு அரசாங்கங்களும் சேர்ந்து மீன்பிடிப்பதற்கு உங்களுக்கு அனுமதி தந்தாலும் கூட எங்களது உயிர் இருக்கிற வரை எங்கள் வளத்தை அடுத்த நாட்டிற்கு கையளிக்கவோ, வளங்களை சூறையாடிச் செல்லவோ நாங்கள் விட மாட்டோம். எங்களது உயிரை கொடுத்தாவது அந்த வளங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முயற்சிப்போம்.

இந்திய மீனவர்களாகிய நீங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தி போராட்டம் நடத்துவதை கைவிடுங்கள். அனைவரும் ஒன்றுகூடி ஒரு பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு பகுதியும் வாழக்கூடியதாக ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:22 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

Last Updated : Jul 20, 2024, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details