தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலி.. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு - Iran president Ebrahim Raisi Died - IRAN PRESIDENT EBRAHIM RAISI DIED

Iran Presidential helicopter crash 2024: அசர்பைஜானை ஒட்டி அமைந்துள்ள ஈரானின் ஜால்பா நகரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

Photo of Iran's president Ebrahim Raisi
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் புகைப்படம் (Credits - AP Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:00 AM IST

தெஹ்ரான்:அசர்பைஜானை ஒட்டி அமைந்துள்ள ஈரானின் ஜால்பா நகரில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆனதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் நாட்டின் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டின் பிரதமராக இருந்தவர், இப்ராஹிம் ரைசி. இவர் அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் திறப்பதற்காக ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். இவ்விழாவில் பங்கேற்றப் பின்னர், மீண்டும் அவர் ஈரானிற்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பிக் கொண்டிருந்ததார்.

அப்போது, அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்த அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் என மொத்தம் 9 பேர் பயணித்தனர்.

இந்த நிலையில், இந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதோடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது. தொடர்ந்து அங்கு நிலவிய கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், அந்நாட்டு அரசும் இதனை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, ஈரான் நாட்டின் காபந்து அதிபராக அந்நாட்டின் துணை அதிபராக உள்ள முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் அரசியல் சாசனத்தின் படி, 50 நாட்களுக்குள் இவர் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.

ஈரான் அதிபரின் உடல் மீட்பு: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளின் உடல்கள் அஜர்பைஜான் அருகே ஜால்பா மலைப்பகுதியில் இருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, இந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:அடுத்த ஈரான் அதிபராகிறார் முகமது முக்பர்? இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈரானில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? - President Of Iran Muhammad Mukhbar

ABOUT THE AUTHOR

...view details