ஐதராபாத்:இது தொடர்பாக justgiving என்ற தனியார் Crowdfunding தளத்தில், "கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் பட்டாபிராமன் என்பவர் லண்டனில் உள்ள பிரபல உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பட்டாபிராமனுக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஹோட்டல் பணியை முடித்துக் கொண்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலருக்கும் விக்னேஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, அதுவே முற்றி கைகலப்பானதில் காரில் வந்தவர்கள் தாக்கியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.