தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேல்-ஈரான் இடையிலான முழு அளவிலான போர்...இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது - Israel Hamas War

இஸ்ரேல்-ஈரான் இடையிலான முழு அளவிலான போர் என்பது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுக்கிறது.

போரின் சேதாரத்துக்கு உடைமையாகும் குழந்தைகள்
போரின் சேதாரத்துக்கு உடைமையாகும் குழந்தைகள் (image credits-AP)

By Bilal Bhat

Published : Oct 7, 2024, 3:01 PM IST

ஹைதராபாத்:போரில் உயிரிழப்பு என்பதுதான் முதல் உண்மை, பெண்கள், குழந்தைகள் இரண்டாம் பட்சம்தான் என்பது எஸ்கிலஸ் என்ற கிரேக்க அறிஞரின் புகழ்பெற்ற வாசகமாகும். இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், ரஷ்யா-யுக்ரேன் இடையேயான மோதல் அல்லது மேற்கு ஆசியாவின் இதர பகுதிகளுக்கும் பரவும் பேரழிவு என எந்த ஒரு போருக்கும் இந்த வாசகம் தொடர்ந்து உண்மையாகவே இருக்கிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவையே ஏமாற்றி விட்டு பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் குதித்த ஹாமாஸ் படையினர் சராமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தி முழு அளவிலான போருக்கு வித்திட்டனர். கடந்த ஆண்டு ஆக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை கொன்றனர். 250 பேரை பிணைய கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் இன்னும் ஹமாஸ் அமைப்பினர் வசம் காசாவில் ரகசிய பகுதியில் உள்ளனர்.அவர்களில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது.

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 41,000த்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் 16,000 குழந்தைகளும் அடக்கம். 19,000 பேர் பெற்றோரை இழந்து அனாதை இலங்களில் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கை, கால்களை இழந்து மாற்றுதிறனாளிகள் ஆகி உள்ளனர். 90 சதவிகித பாலஸ்தீனர்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். முழுமையான தடை காரணமாக பெரும்பாலான மக்களுக்கு போதுமான உணவு கிடைக்காத சூழல் எழுந்துள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து போயிருக்கின்றன.

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் (image credits-AP)

மோதல் தொடங்கி ஒரு ஆண்டு ஆன நிலையில் பாலஸ்தீனம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் பிணைக்கைதிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர். இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தோன்றினாலும், மோதல் தொடங்கிய காசாவில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. வான்வழியே வீசப்படும் குண்டுகளுக்கு பெண்கள், குழந்தைகள் எளிதாக இலக்காகின்றனர். எந்த ஒரு இடமும் பாதுகாப்பு இல்லை என்பதால் எங்கே பாதுகாப்பாக தங்குவது என்ற சூழல் எழுந்துள்ளது. காசாவில் மருத்துவ வசதி உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் இரண்டாம் பட்சமான நிலையில் வாழ்வாதாரம் மற்றும் இருத்தலுக்கான அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க:ஈரான் Vs இஸ்ரேல் மோதல்! பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

உயிர் பிழைக்க தப்பித்து ஓடக்கூட முடியாத நிலையில் இருக்கும் குழந்தை குண்டு வீச்சில் இரண்டு துண்டுகளாக சிதறி மடிகிறது. இதற்கு மத்தியில் மனித கவுரவம் பறிக்கப்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக ஆடித்திரிய முடியவில்லை. அவர்கள் போரின் சேதாரத்துக்கு உடைமையாகின்றனர். அவர்கள் யார் ஒருவருக்கும் எதிரிகள் அல்லர். அவர்களை கண்ணியம் இல்லாதவர்களாக நடத்தவும் கூடாது. குழந்தைகள் உரிமைகள் புனிதமாக கருதப்பட்ட தேசங்களில், ஒருபுறம் குழந்தைகளை கொன்று கொண்டே, குழந்தைகள் உரிமைகள் குறித்து மாநாடுகளில் பெரிதும் விவாதிக்கின்றனர். போரின் தாக்கம் இதர பிராந்தியங்களுக்கும் பரவும் நிலையில் அந்த பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக தாக்குதல்களுக்கு இலக்காகின்றனர்.

இஸ்ரேல் தரப்பில் இப்போது லெபனானுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் மக்கள் வாழ்வாதாரம் நீடித்திருப்பது கேள்விக்குறியாகி உள்ளது. லெபனான் மீது தாக்குதல் என்ற செய்தி மேற்கு ஆசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காசா மீதான கொடூதர தாக்குதல்கள் அவர்ளின் உணர்வுகளில் எதிரொலிக்கின்றன. பாலஸ்தீனம் மற்றும் லெபனானின் சில பகுதிகளில் வான்வழி குண்டு வீச்சுகள் அந்த பிராந்தியம் முழுவதையும் நிச்சயமற்ற தன்மைக்கு உள்ளாக்கி உள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு அடுத்து குறிவைக்கப்படலாம் என்பதால் ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் சில காலத்துக்கு அமைதியாக உள்ளனர். ஹவுதி, ஹிஸ்புல்லா இரண்டு அமைப்புகளின் பின்னாலும் ஈரான் உள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்ட பின்னர், வேறு வழியில்லாத சூழலில் பேரழிவை நோக்கி செல்கிறது. இஸ்ரேல் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான முயற்சியாக க்கூட இது இருக்கலாம். ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகியவற்றுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் கடுமையானது மற்றும் தீவிரமானதாகும். ஏமன், லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கின்றன.

சவுதி அரேபியா மற்றும் இதர சன்னி இஸ்லாமிய நாடுகள் தூதரக ரீதியான மென்மையான போக்கை கடைபிடிக்கின்றன. கண்டனங்களில் இருந்து தற்காத்துக் கொள்கின்றன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கோருகின்றன. இஸ்லாமிய நாடுகள் எச்சரியாக இருக்கின்றன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே சமரச பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முயற்சிக்கின்றனர். எகிப்து , கத்தார் போர் நிறுத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கிறது ஆயுத உதவியும் அளிக்கிறது. இஸ்ரேலை போர்நிறுத்தத்துக்கு உடன் பட செய்யும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியை தழுவியது.

எல்லாவற்றுக்கும் மேலே, இஸ்ரேலுடன் நெருங்கிய உறவையும், பாலஸ்தீன தலைவர்களுடன் சுமுக உறவையும் நிர்வகிக்கும் இந்தியா இந்த சூழலில் மிகவும் முக்கியமான நிலையில் உள்ளது. இது மேற்கு ஆசியா முழுமைக்குமான நலனுக்கானது என்பதால் இந்தியா மிகவும் கவனமாக அடி எடுத்து வைக்கிறது. இந்தியா மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் என்ற திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த வெற்றி என்பது பெரும் அளவில் சவூதி அரேபியாவை சார்ந்து உள்ளது. சவூதி மட்டுமின்றி ஈரானும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஈரானில் உள்ள இந்தியாவின் சாபஹர் துறைமுகம் உத்திப்பூர்வமாக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரான், சவூதி இரண்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான நாடுகளாகும்.

இஸ்ரேலில் இருந்து முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. அதே நேரத்தில் ஈரான் இந்தியாவுக்கு கச்சா எண்ணைய் வழங்குகிறது. இந்த நிலையில் மொத்த மேற்கு ஆசியாவும் உத்திப்பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 80 சதவிகித கச்சா எண்ணைய் வளங்கள் மேற்கு ஆசியாவில் இருந்து வருகின்றன. இதில் சிக்கல் நேர்வது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இஸ்ரேல்-ஈரான் இடையிலான முழு அளவிலான போர் என்பது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுக்கிறது. வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறது. மேற்கு ஆசியாவில் உள்ள வாய்ப்புகள், வளங்களை யார் பயன்படுத்திக் கொள்வது என்பதில் இந்தியா, சீனா இடையே போட்டி நிலவுகிறது. எனினும் இதில் இந்தியாவின் கை ஓங்கி உள்ளது.

ஹமாஸ் ஒருவேளை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால், சீனாவின் தீர்வு என்பது வேறு விதமாக இருந்திருக்கும். ஹமாஸ்-அல் ஃபதாஹ் இடையேயும், அதே போல சவூதி அரேபியா-ஈரான் இடையேயும் ஒரு உடன்படிக்கை நேரிடுவதற்கான நடுவராக முயன்றிருக்கும். சன்னி மற்றும் ஷியா பிரிவை ஒருங்கிணைப்பதற்கு முன்பு, முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சவூதி-ஈரான் இடையே தீர்க்கமுடியாத அளவுக்கு உணர்வுகள் அதிகமாகி விட்டன. இஸ்ரேலின் கை ஓங்கி விட்டது. இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போரிடும், இது சவூதி அரேபியா, இஸ்ரேல் இரண்டுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். ஹவுதிக்களை ஒழித்துக் கட்டுவதில் இருதரப்புக்குமே சிக்கலாக இருக்கும். ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கிறது மற்றும் எப்படி விஷயங்கள் வெளிவருகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details