வாஷிங்டன்:வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அம்மாகாண செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சை துணை அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு ஜேம்ஸ் டேவிட் வென்ஸ் சிறந்த தேர்வாக இருப்பார் என டிரம்ப் கூறினார்.
மேலும், தன்னுடன் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்க வேன்ஸ் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். அதேநேரம் துணை அதிபர் பதவிக்கு வென்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பைக் கடுமையாக எதிர்த்தவர் ஜேம்ஸ் டேவிட் வென்ஸ்.
2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின் போது டிரம்ப்பை அறிவற்றவர் என்றும் அமெரிக்காவின் ஹிட்லர் என்றும் வென்ஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் ஜேம்ஸ் டேவிட் வென்ஸ் எப்படி டிரம்ப்பின் தீவிர விசுவாசியாக மாறினார் என்பது வியக்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.