தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹாரிஸா, டிரம்பா? அடுத்த அதிபர் யார்? வாக்குச்சாவடிகளில் வரிசைக்கட்டி நின்ற அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் அடுத்த அதிபர் கமலா ஹாரிஸா, டிரம்பா என்பதை முடிவு செய்யும் முக்கியமான தேர்தலில் அமெரிக்கர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

டிரம்ப், கமலா ஹாரீஸ்
டிரம்ப், கமலா ஹாரீஸ் (credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 11:00 PM IST

வாஷிங்டன்:உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை (இந்திய நேரப்படி) துவங்கியது. அம்பாலா, டெலாவேர், வாஷிங்டன், டி.சி., புளோரிடா, ஜோர்ஜியா, இல்லினாய்ஸ், கன்சாஸ், மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களில் அமெரிக்க நேரப்படி காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியது என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று 120,000 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மிசோரி, பென்சில்வேனியா, ரோட் தீவு, தென் கரோலினா டென்னசி உள்ளிட்ட மாகாணங்களில் காலை 7 மணியளவிலும், மேரிலாந்து, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட சில மாகாணங்கள் காலை 6 மணியளவிலும் வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கனெக்டிகட், இந்தியானா, கென்டக்கி, மைனே, நியூ ஜெர்சி, நியூயார்க், வர்ஜீனியாவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருவதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், அமெரிக்க மக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இத்தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த எக்ஸ் வலைதள பதிவில், ' உங்களது வாக்குரிமை மூலம் கமலா ஹாரிஸை தேர்ந்தெடுப்பதன் மூலம் வரலாறு படையுங்கள்" என்று அமெரிக்க மக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

"நாட்டை நேசிக்கும் அனைவரும் தேர்தல் நாளான இன்று வாக்களிக்க உள்ளோம். இந்நாளில் உங்கள் (வாக்காளர்கள்) குரலை ஒலிக்கச் செய்யுங்கள்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

"ஊழல் பேர்வழிகளை வீழ்த்த நாளை தான் நமக்கு கடைசி வாய்ப்பு. அவர்களை வெளியேற்றும் நோக்கில்

ABOUT THE AUTHOR

...view details