தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவில் மீண்டும் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Earthquake in China: சீனாவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Jan 23, 2024, 8:51 AM IST

சீனா: சீனாவின் தெற்கு சின்ஜாங் பகுதியில் நேற்று (ஜன.22) இரவு 11.39 மணி 11 நொடிகளில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.2 என பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நிலநடுக்கமானது 80 கிலோமீட்டார் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் டெல்லி உள்பட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்பு சீனாவின் கன்சு மற்றும் அதன் அண்டை மாகாணமான குயிங்கா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட 6.2 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதில் 87 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அது மட்டுமல்லாமல், 15 ஆயிரம் வீடுகள் உள்பட 2 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகளைச் சந்தித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. மேலும், இதன் மூலம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் இரண்டு துண்டுகளான புதிய வீடு.. பொதுப்பணித்துறையின் கவனக்குறைவு தான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details