இஸ்ரேல்:இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 39 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாம், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களையும் இஸ்ரேல் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஹமாஸ் தலைவர்:இதற்கிடையில், ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியானின் கடந்த ஜூலை 30ஆம் தேதி பதவி ஏற்றார். இவரது பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார். இதற்காக ஈரான் தலைநகரம் தெஹ்ரானுக்கு அவர் சென்றிருந்தார். இந்நிலையில், தனது வீட்டில் தங்கி இருந்த இஸ்மாயில் ஹனியேவும், அவரது பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.