ஜகார்தா:அதிக இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடான இந்தோனேஷியாவிற்கு மீண்டும் தலைவலியாக நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்தா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பெலபுஹன்றது டவுன் பகுதியில் பூமியின் மேற்பரப்பில் இருந்து 37 புள்ளி 2 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில அதிர்வு அண்ட நகரங்கள் மற்றும் டவுன் பகுதியிலும் உணரப்பட்டதாகவும் அதன் காரணமாக மக்கள் அச்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் என்பது சர்வசாதாரணம் என்றாலும் ஜகார்தா பகுதியில் பெரும்பாலும் நில அதிர்வுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவில் உள்ள சியன்ஜுர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 602 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன் கடந்த 20198 ஆண்டு நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்கி 4 ஆயிரத்து 300 பேர் பரிதாபமாக இறந்தனர். அதேபோல் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பீகார் சாலை விபத்து: சாலையில் பறிபோன 9 உயிர்! எப்படி நடந்தது?