தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உலக நீரிழிவு தினம்: ஏ.ஆர் ரஹ்மான் வலியுறுத்தும் நீரிழிவு ரெட்டினோபதி என்றால் என்ன? முழு விவரம்! - WORLD DIABETES DAY 2024

உலக நீரிழிவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ள, நீரிழிவு ரெட்டினோபதி என்றால் என்ன? அவை ஏற்படுத்தும் பாத்திப்பு என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்..

Music Director AR Rahman
Music Director AR Rahman (Credits - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Nov 14, 2024, 11:57 AM IST

இன்று உலகம் முழுவதும் நீரிழிவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், 'நீரிழிவு கடுமையான குருட்டுத்தன்மையை கூட ஏற்படுத்தும் எனவும் பார்வையை பாதுகாக்க வருடாந்திர கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்' என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது X தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், நீரிழிவு தினத்தில் அவர் குறிப்பிட்டுள்ள நீரிழிவு ரெட்டினோபதி என்றால் என்ன? அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம். பத்தாண்டுகள் முன்பு வரை, 40 முதல் 45 வயதினரை அதிகம் பாதித்து வந்த நீரிழிவு நோய், தற்போது 25 வயது உடைய இளைஞர்களையும் அதிகம் பாதிக்கிறது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நீரிழிவு ரெட்டினோபதி என்றால்?:கண்களின் திரைக்குப் பின்னால் இருக்கும், சென்சிடிவ் திசுவான ரெட்டினாவை சேதப்படுத்தி கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குவது தான் நீரிழிவு ரெட்டினோபதி (Diabetic retinopathy). இவை, விழித்திரை நரம்பு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

பாதிப்பு யாருக்கு?: இந்த பிரச்சனை டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது மற்றும் டைப் 2 நீரிழிவுடன் நீண்ட நாட்களாக ரத்த குளுக்கோஸ் அளவு உச்சத்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறது நேஷனல் ஐ இன்ஸ்டிடியூட்(National Eye Institute).அதுமட்டுமல்லாமல், கர்ப்ப காலத்திலும் நீரிழிவு ரெட்டினோபதி ஏற்படும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நீரிழிவு ரெட்டினோபதி (Credits - Getty Images)

தீவிர நிலை:இவை, எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கண்களை பாதிக்க கூடியது. கண் நரம்புக்குள் விழித்திரையின் நடுவில் பார்வையை அளிக்கும் இடத்தில் நீர் கோர்ப்பதால், கண்களில் ஆக்ஸிஜன் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், கெட்ட இரத்தம் அதிகரித்து ரத்தக்குழாய் வெடித்து கண்ணுக்குள் கசிவுகள் உண்டாகிறது. இது தீவிரமாகும் போது, குருட்டுத்தன்மை பிரச்சனை நேரிடும்.

ரஹ்மான் வலியுறுத்துவது என்ன?: நீரிழிவு நோய் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , "நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் - நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும்.

ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி: வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம். இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்.நன்றி" என பதிவிட்டுள்ளார். நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மானின் விழிப்புணர்வு பதிவு அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க:

மட்டன் பிரியரா நீங்கள்?..சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி!

நீரிழிவு நோய்: கால்களை பரிசோதிப்பது அவசியம்.. டாக்டர் அட்வைஸ்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details