பல ஆண்டு காலங்களாக ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு பிரதான மருந்தாக இருந்து வருவது நெல்லிக்காய் தான். நெல்லிக்காய் தரும் பல்வேறு நன்மைகளுக்காகவே, இதனை பலர் தினமும் காலை ஜூஸ் செய்து குடித்து வருகின்றனர். இந்நிலையில், இரவு அதிலும் குறிப்பாக தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
செரிமானத்தை ஊக்குவிக்கும்:நெல்லிக்காய் சாற்றை இரவில் எடுத்துக்கொள்வது செரிமானத்திற்கு உதவுவதோடு ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். நார்ச்சத்து பண்புகளுக்காக அறியப்படும் நெல்லிக்காய் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
நெல்லிக்காய் சாற்றை பருகுவதால், இரைப்பையில் உள்ள அமிலங்களை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துவதாக மெடிசினல் ஃபுட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூங்க செல்வதற்கு முன் நெல்லிக்காய் சாறு குடிப்பது அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை தொடர்பான பிரச்சனைகளை நீக்கி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
எடை இழப்பிற்கு உதவும்:உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்பவர்கள் இரவில் நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம். டயபெடிக்ஸ் அண்ட் மெடபோலிக் டிஸ் ஆர்டர் இதழலால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நெல்லிக்காய் சாறு உடல் எடை மற்றும் உடல் கொழுப்பின் சதவீதத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தூங்கும் போது நாம் எதையும் உட்கொள்ளாமல் இருப்பதால், நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும். மாலைப் பொழுதில் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
இதையும் படிங்க:எடை இழப்பு முதல் முடி வளர்ச்சி வரை..தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்! |
சரும ஆரோக்கியம் மேம்படும்: இரவில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் சரும ஆரோக்கியம் கணிசமாக மேம்படும். நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இது வயதான தோற்றத்தை கொடுக்கும் சுருக்கங்கள் ஆகியவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
நெல்லிக்காயை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தின் நீரேற்றத்தை மேம்படுத்தும் என்று பைட்டோதெரபி ஆராய்ச்சியில் ஒரு ஆய்வு நிரூபித்ததுள்ளது. குறிப்பாக, இரவில் உட்கொள்ளும் போது, நெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகமாக வேலை செய்வதோடு, சருமம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகின்றது.