கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு இடமளிக்கும் வகையில் வயிறு பெரிதாகும் போது தோல் நீண்டு ஸ்ட்ரெச் மார்க்குகள் உருவாகின்றன. இந்த தழும்புகள் வயிறு மட்டுமின்று, மார்பகங்கள், தொடைகள்,கைகளில் கூட தோன்றுகின்றன. இதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும், சில குறிப்புகளை பின்பற்றுவதால் அதன் தோற்றத்தை குறைக்கலாம். அது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்...
தேங்காய் எண்ணெய்: பொதுவாகவே, விர்ஜின் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடியும். கர்ப்பிணிகள், தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறுது நேரம் மசாஜ் செய்து நீரால் கழுவினால் நாள்பட தழும்புகள் மறையும் வாய்ப்புகள் உள்ளன.
பாதாம் எண்ணெய்:தினமும் பாதாம் எண்ணெயில் வயிற்று பகுதியை மசாஜ் செய்வதால் தழுப்புகள் மறைய உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாதாம் எண்ணெயுடன் சம அளவு சர்க்கரை எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி, தழும்புகள் உள்ள இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்னர், சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தமும்புகள் மெல்ல மெல்ல மறைகின்றன. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை செய்து வரும் போது நல்ல மாற்றத்தை காண முடியும்.
கற்றாழை ஜெல்: சரும பராமரிப்பில் கற்றாலை ஜெல் முக்கிய பங்கு வகுக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் அல்லது பிரசவித்த கர்ப்பிணிகள் தினமும் குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வரும் போது தழும்புகள் மறைகின்றன
விளக்கெண்ணெய்: பிரசவத்தின் போது ஏற்படும் தழும்புகள் மற்றும் தசை விரிவு கோடுகளை நீக்கும் தன்மையை கொண்டது விளக்கெண்ணெய். இந்த எண்ணெய்யை தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டை, முட்டி மேல் பகுதி உள்ளிட்ட இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்