தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு'..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'கருப்பு உணவுகள்' பட்டியல் இதோ! - Black foods benefits - BLACK FOODS BENEFITS

Black foods benefits: ஊட்டச்சத்து கிடைப்பதற்கு கலர் கலரான பழம், காய்கறிகளை தேடி உண்ணும் பலருக்கு கருப்பு வகை உணவுகளில் நிறைந்திருக்கும் சத்துக்கள் பற்றி தெரியுமா? கருப்பு நிறத்தில் உள்ள சில உணவுகளையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் என்னென்ன என்பதை பார்க்கலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Sep 20, 2024, 1:56 PM IST

ஹைதராபாத்: கருப்பு நிறம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவே நமது தட்டில் இருந்தால்? அவ்வளாவு தான்..பச்சை காய்கறிகள் என்றாலே முகம் சுளிக்கும் பலருக்கு மத்தியில் கருப்பு உணவுகளை பற்றி சொல்லவே தேவை இல்லை. பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும் இந்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடப்பது உங்களுக்கு தெரியுமா?

சில உணவு பொருட்களில் அந்தோசயினின்கள் எனப்படும் நிறமிகள் உள்ளதால் அவை கருப்பு, நீலம் அல்லது ஊதா நிறத்தில் தோன்றும். இந்த உணவுகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை திறம்பட எதிர்த்துப் போராட உடலுக்கு சக்தி அளிக்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அப்படி, நாம் பார்த்து வளர்ந்த, சாப்பிட்ட சில கருப்பு நிற உணவுகளில் நன்மைகளை தெரிந்து கொள்ளுவோம்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுனி அரிசியை சாப்பிடலாம் (Credit - ETVBharat)

கருப்பு கவுனி:நமது பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான கருப்பு கவுனி அரிசி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக விளைகிறது.இந்தியாவில் இதை எல்லோரும் பயன்படுத்திய நிலையில், பழங்காலத்தில் சீனாவில் இந்த அரிசி மன்னர்கள் மட்டும் தான் சாப்பிட முடிந்தது. சாதரண மக்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. காரணம், இதிலுள்ள சத்துக்களும், அது தரும் ஆரோக்கிய நன்மைகளும் தான்.

கருப்பு கவுனி அரிசியில் லுடீன்(lutein) மற்றும் ஜியாக்சாண்டின்(zeaxanthin) உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஏராளமான நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடல் எடையை குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. இந்த அரிசியில் புலாவ், பிரியாணி,புட்டு, தோசை, இட்லி போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.

இடுப்பு, மூட்டு வலிகளுக்கு கருப்பு உளுந்து வரப்பிரசாதம் (CREDIT - GETTY IMAGES)

கருப்பு பருப்புகள்: கருப்பு வகை பருப்புகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஃபோலேட், புரதம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது உடலில் ஆரோக்கியமான கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது, மேலும் பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

எலும்பு தேய்மானத்தால் வரும் இடுப்பு, மூட்டு வலிகளுக்கு கருப்பு உளுந்து வரப்பிரசாதமாக இருக்கிறது. அதே போல, கருப்பு நிற பீன்ஸ், மொச்சை மற்றும் கருப்பு கொள்ளு பயிர்களை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மிளகு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் (CREDIT - GETTY IMAGES)

மிளகு:கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கருப்பு மிளகு, புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், நெஞ்சுச்சளி,ஜலதோஷம்,நுரையீரல் மற்றும் செரிமான பிரச்சனைகளையும் நீக்குகிறது. மிளகின் மகத்துவத்தை அனைவருக்கு கரோனா கற்றுத் தந்திருக்கும் என்றால் மிகையாகாது.

கருப்பு ஆலிவ்: ஆலிவ்கள் மேற்கத்திய உணவுகளில் ஒன்று. இந்தியாவில் இதை பெரும்பாலானோர் பீட்சா மற்றும் கடைகளில் தயார் செய்யப்படும் பாஸ்தாக்களில் பார்த்திருப்போம். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. கருப்பு ஆலிவ்களிலிருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் மற்றும் பானங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளம. அவை கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பங்களிக்கின்றன.

கருப்பு எள் மூட்டு வலியை குறைக்கிறது (CREDIT - GETTY IMAGES)

கருப்பு எள்: 'இளைச்சவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு' இந்த சொல்லாடல் ஞாபகம் இருக்கிறதா?. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் எள்ளு சாப்பிடுவது நல்ல பயணை தருகிறது. எள்ளு, நார்ச்சத்து, புரதச்சத்து, மெக்னீசியம்,பொட்டாசியம், இருப்பும்சத்து, வைட்டமின் ஈ என கருப்பு எள் ஊட்டச்சத்தின் பெட்டகமாக இருக்கிறது. மூட்டு வலி, உடல் வீக்கங்களை குறைக்க எள் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

கருப்பு திராட்சை புற்றுநோய்களை எதிர்த்து போராடுகிறது (CREDIT - GETTY IMAGES)

கருப்பு திராட்சை:மலச்சிக்கல்,இரத்த அழுத்தம், நரைமுடியைத் தவிர்ப்பது முதல் எலும்பு அரோக்கியம், புற்றுநோய்களை எதிர்த்து போராடுவது என உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை கருப்பு திராட்சை தருகிறது. இதில், ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள், லிவோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதில் உள்ள விதைகளை வீசிவிடாமல் மென்று சாப்பிட்டால் கூடுதல் நன்மை..!

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details