தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உடலின் கன்ட்ரோல் ரூமான மூளையின் ஆற்றலை அதிகரிக்கனுமா? - நிபுணர்களின் டிப்ஸ் இதோ! - மூளை ஆற்றலை அதிகரிக்க டிப்ஸ்

Brain health: நன்கு ஓய்வெடுத்த மூளை பெரிய சவால்களான வேலைகளிலும் நிதானமாக செயல்படுவதற்கு உதவும். மூளைக்கு ஓய்வு என்றவுடன் யோசிப்பதற்கு விடுப்பு என்று யாரும் எண்ணி விடக்கூடாது. நமது அன்றாட நடவடிக்கைகளின் மூலம் மூளைக்கு ஓய்வு கொடுத்து மூளையை புத்துணர்ச்சியாக்க வேண்டும்.

மூளை ஆற்றலை அதிகரிக்க டிப்ஸ்
மூளை ஆற்றலை அதிகரிக்க டிப்ஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 10:11 PM IST

சென்னை: சென்னை: ஒரு கணினி அல்லது செல்போனுக்கு ஓய்வு கொடுக்காமல் உபயோகப்படுத்தும் போது, அவை செயலிழந்து விடும். நமது உடலுக்கே கண்ட்ரோல் ரூம் ஆக செயல்படும் மூளை, வேலை பளுவால் சோர்வடையும். இதனால் நாம் கவன சிதறல், மந்தம், மனச்சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படும். ஆகவே மூளைக்கு ஓய்வு தேவை. அவ்வாறு ஓய்வு கொடுக்கும் போது, படைப்பாற்றல், நினைவாற்றல் அதிகரிக்கும்.

நல்ல தூக்கம்

நன்கு ஓய்வெடுத்த மூளை பெரிய சவால்களான வேலைகளிலும் நிதானமாக செயல்படுவதற்கு உதவும். நேர்மறையான மனநிலையை அளிக்கும். நாம் புத்துணர்ச்சியாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பதற்கு உதவும். மூளைக்கு ஓய்வு என்றவுடன் யோசிப்பதற்கு விடுப்பு என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. நமது செயல்முறையின் மூலம் மூளைக்கு ஓய்வு கொடுத்து மூளையை புத்துணர்ச்சியாக்க வேண்டும். இப்போது மூளையின் புத்துணர்ச்சிக்கு என்னென்ன வழிகளை கடைபிடிக்கலாம் என்று பார்க்கலாம்.

நல்ல தூக்கம்:நல்ல தூக்கம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் வயதில் பெரியவர்கள் தினமும் 7 முதல் 9 மணி நேர தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மேலும் கடுமையான உடல் உழைப்பு இருப்பவர்கள் 8 முதல் 10 மணி நேரமும், அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் குறைந்தது 6 மணிநேரமும் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவில் போதுமான தூக்கம் இல்லாதவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொள்ளலாம். 20 முதல் 30 நிமிட தூக்கம் அறிவாற்றலையும், செயல்திறனையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி:உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் மன ஆரோக்கியம் அதாவது மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் பொது நம் மூளை செரோடோனின் மற்றும் எண்டோபின் போன்ற கெமிக்கலை வெளியிடும். இதனால் நம் மனநிலை மேம்பட்டு, மூளையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

உடற்பயிற்சி

உணவுமுறை:உடற்பயிற்சி போல உணவு முறையும், மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சத்தான உணவை சரியான நேரத்தில் உண்பதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூளையின் செயல்பாட்டிற்கு நன்மையளிக்கின்றன.

குறிப்பாக மீன், முட்டை, பச்சை நிற காய்கறிகள், பாதாம், அக்ரூட் பருப்பு, பூண்டு, கேரட் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். மூளையின் ஆரோக்கியத்தில் வல்லாரைக்கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே அடிக்கடி வல்லாரைக்கீரை சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உணவுமுறை

பிரேக் முக்கியம்:ஒரு திரைப்படத்திற்கு இடைவேளை இருப்பது போல நம் வேலைகளுக்கும் இடைவேளை தேவை. பணியின் போதோ அல்லது படிக்கும் போதோ ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த இடைவெளியின் போது செல்போன் பயன்படுத்துவது மூளைக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணியின் போது இடைவேளை எடுத்துக்கொள்வது மூளையை புதுப்பிக்க உதவுகிறது.

டிஜிட்டலில் இருந்து ஓய்வு:ஓய்வு, இடைவேளை என்றவுடன் நம் மனது நமது செல்போனையும், டிவியையும் தான் தேடும். மூளைக்கு முழுமையான ஓய்வு கொடுக்க வேண்டுமென்றால் செல்ப்போன், டிவி, கணினி போன்றவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும். எலட்ரானிக் சாதன பயன்பாட்டை தவிர்த்து, பூங்காக்கள், கடற்கரைகளில் நடப்பது, ஓவியம் வரைவது, இசைக்கருவிகளை இசைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபடவும் உதவும்.

சமூகத் தொடர்பு:சமூக வலைதள தொடர்பில் இருந்து விடுப்பட்டு, சமூகத்துடன் தொடர்பு கொள்வதால் மூளை சுறுசுறுப்புடன் புத்துணர்வாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, அவர்களுடன் சுற்றுலா அல்லது வெளியில் செல்வது போன்ற செயல்களை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இதனால் மூளை மன அழுத்தம் மற்றும் வழக்கமான சிந்தனையில் இருந்து விடுபட்டு மூளை கூர்மையாகும்.

சமூகத்துடன் தொடர்பு கொள்வதால் மூளை சுறுசுறுப்புடன் புத்துணர்வாக இருக்கும்

இதையும் படிங்க:பி.சி.ஓ.எஸ் பிரச்சினையால் நினைவாற்றல் பாதிக்கக்கூடுமா? - அமெரிக்க ஆய்வு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details