சென்னை:உலகளவில் பெண்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.1 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். தோராயமாக 0.5 முதல் 1 சதவீதம் புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படுகின்றன. கடந்த 2022இல் உலகளவில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாகவும், 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organisation) கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவீதம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1985ஆம் ஆண்டில் முதல் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான அடையாளமாக இளஞ்சிவப்பு நிற ரிப்பனை (Pink ribbon) தேர்ந்தெடுத்தது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிலைப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகப் பாலம் ( Sydney's Harbour Bridge), கனடாவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls in Canada), ஜப்பானில் உள்ள டோக்கியோ கோபுரம் (Tokyo Tower in Japan) ஆகிய இடங்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்படும்.
மார்பக புற்றுநோய்: மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது. கட்டுக்குள் வைக்கப்படாவிட்டால் கட்டிகள் உடல் முழுவதும் பரவி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க