இரத்த சோகை நீங்கும்: பீர்க்கங்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சோகை பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை உணவில் பீர்க்கங்காய் சேர்க்கும் போது, இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுவதோடு, இரத்த சோகையால் ஏற்படும் சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சனைகளை நீக்கும். இரத்த சிவப்பணுக்களை ஒருங்கிணைக்க உதவும் வைட்டமின் பி6 பீர்க்கங்காயில் நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: சளி, காய்ச்சல் முதல் கல்லீரல் தொற்று வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளை வராமல் தடுக்கும். பீர்க்கங்காய் வைட்டமின் சி, இரும்பு சத்து, தியாமின், மெக்னீசியம், தாதுக்களால் நிறைந்துள்ளதே இதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் பீர்க்கங்காய் கொண்டுள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
வெயிட் லாஸ்: நார்ச்சத்தால் நிறைந்துள்ள பீர்க்கங்காய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசி உணர்வை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், இவற்றில் குறைந்த கலோரிகள் மட்டுமே இருப்பதால் எடை இழப்புக்கு சிறந்த வழி. கூடுதலாக, செரிமானத்திற்கும் உதவியாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது:பீர்க்கங்காயில் இயற்கையான முறையில் இருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து பசியை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இவற்றில் உள்ள பெப்டைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காய்யாக இருக்கிறது.
பார்வை மேம்படும்: பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் பார்வையை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. இது, முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், பார்வை இரத்த நாளங்களுடன் தொடர்புடைய நச்சுகளை அகற்றவும் உதவியாக இருக்கிறது.