ஹைதராபாத்:குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் உணவு பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிப்பது முக்கியமாகும். சமையல் அறையில் சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் இந்த தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய பாக்டீரியா தொற்று அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முறையான உணவு கையாளுதல், உணவு சமைத்தல் முறைகளை மேற்கொள்ள வேண்டும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில் குய்லின்-பார் சிண்ட்ரோம் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதற்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் இது குறித்து மும்பை லீலாவதி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சி.சி.நாயர் கூறுகையில், "சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சிகள், காணப்படும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி (Campylobacter jejuni), சுத்தம் இல்லாத காய்கறிகள், பால், அழுக்காக காணப்படும் சமையலறை ஆகியவற்றின் மூலம் இந்த அபாயகரமான பாக்டீரியா உருவாகி தீங்கு விளைவிக்கும் தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்றார்.
உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க கீழ் குறிப்பிட்ட உணவு பாதுகாப்பு முறைகளை கையாளலாம்.
1. சரியான வெப்ப நிலையில் கோழி இறைச்சியை சமைக்க வேண்டும்
சற்றே இளம் சிவப்பு நிற கோழி இறைச்சியை உண்ணும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சியில் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது குய்லின்-பார் சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய முன்னணி பாக்டீரியா பாதிப்புகளில் ஒன்றாகும்.
பாதுகாப்பான சமையல் குறிப்புகள்
பாக்டீரியாவை அகற்றும் வகையில் 75 டிகிரி சென்டிகிரேட்டில் எப்போதுமே கோழி இறைச்சியை சமைக்க வேண்டும். உணவு தெர்மா மீட்டரைப் பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இறைச்சியை கழுவுவதை தவிர்க்கவும். மாறாக சுத்தம் செய்யப்படாத இறைச்சியை கழுவும்போது சமையலறையின் தரைப்பரப்பில் பாக்டீரியா தொற்று பரவக் கூடும்.
2. காய்க்கறிகளை முழுமையாக கழுவவும்
முறையாக கழுவப்படாத காய்கறிகளில் பாக்டீரியா, பூச்சி மருந்துகள், விஷதன்மை ஆகியவை இருக்கக்கூடும். எனவே இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து பொருட்களையும் குழாயில் இருந்து வரும் தண்ணீர் மூலம் முழுமையாக கழுவ வேண்டும்.
பாதுகாப்பாக சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்
கூடுதல் பாதுகாப்புக்காக கீரைகள், காய்கறிகள், பழங்களை தண்ணீர் மற்றும் வினிகர் கலந்த கலவை அல்லது பேக்கிங் சோடாவில் கழுவி உபயோகிக்க வேண்டும். உண்பதற்கு முன்பு முழுமையாக கழுவ முடியாவிட்டால் நறுக்கப்பட்ட பழங்களை உண்பதை தவிர்க்கவும். உருளை கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆகிய காய்கறிகளை தோல் உரிக்கும் போது அழுக்குகள், பாக்டீரியாக்கள நீக்க ஒரு பிரஷை பயன்படுத்தவும்.
3. சூடுபடுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிக்கவும்