தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

தெருநாய்கள் மீது பட்டாசுகளை வீசாதீர்கள்..பட்டாசு வெடிக்கும் போதும் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்!

தீபாவளியை வண்ணமயமாக கொண்டாட அனைவரும் தயராகி வரும் நிலையில், பட்டாசுகளை வெடிக்கும் போது என்ன செய்யலாம்? செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 29, 2024, 11:49 AM IST

தீபத் திருநாளான தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா? சில வழிகாட்டுதல்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் பட்டாசுகளால் ஏற்படும் அசம்பாவிதங்களை நம்மால் தடுக்க முடியும். அதனை நினைவில் வைத்துக்கொண்டு பட்டாசுகளை கையாழுங்கள்..

என்ன செய்ய வேண்டும்?:

  1. பட்டாசுகளை வெடிக்கும் போது எப்பொழுதும் திறந்தவெளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பட்டாசுகளை வெடிக்க தொடங்க வேண்டும்.
  2. வீட்டில் பட்டாசுகளை வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளும் இருக்கக்கூடாது.
  3. கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்
  4. பட்டாசு வெடிக்கும் போது உங்கள் ஆடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீளமாகவும் தொளதொளப்பாகவும் இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  5. பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டும் தான் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
  6. ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ள நபர்கள் பட்டாசு வெடிக்கும் இடங்களில் இருக்க கூடாது. குறிப்பாக, சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகள் வீட்டிற்குள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்
  7. தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைக்க வேண்டும். இதனால், தீ விபத்து போன்றவை ஏற்பட்டாலும் வேகமாக செயல்பட்டு அணைக்கலாம்.
  8. பட்டாசுகளை வெடித்த பின்னர், தண்ணீர் நிறைந்த வாளியில் போட்டு விடுவதால் தேவையற்ற தீ காயங்களை தவிர்க்கலாம்
  9. பட்டாசுகளை வெடித்து முடித்த பின்னர் கண்டிப்பாக சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும்
  10. பட்டாசுகளை பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்

என்ன செய்யக்கூடாது?:

  1. கையில் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிவது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது
  2. மின்சார ஒயர்கள், கம்பங்கள் மற்றும் மரங்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது
  3. வாகனங்களுக்கு உள்ளே பட்டாசுகளை வெடிக்க வைக்க முயற்சி செய்ய கூடாது
  4. பட்டாசுகளை வெடிக்கும் பொழுது நைலான், சில்க் போன்ற துணிகளை அணியக்கூடாது
  5. சானிடைஷர் எளிதாக தீப்பற்ற கூடிய பொருள் என்பதால் பட்டாசு வெடிக்கும் போது அதை அருகில் வைக்க கூடாது
  6. தெருநாய்கள் மீது பட்டாசுகளை தூக்கி வீசக்கூடாது.
  7. தீப்பட்டி, லைட்டர் போன்றவற்றை தவிர்த்து பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்த வேண்டும்
  8. உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளை விளக்குகள், மெழுகுவர்த்தி போன்ற பொருள்களுக்கு அருகில் வைக்கக்கூடாது
  9. வெடிக்கும் பொழுது தீக்காயம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் களிம்பு, மருந்துகளை தடவக்கூடாது.
  10. பட்டாசு வெடிப்பதை செல்பி எடுக்காதீர்கள்

பட்டாசுகளை வெடிக்கும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுங்கள்.

இதையும் படிங்க:

பாரம்பரிய பொருட்களில் கிஃப்ட்.. மதி அங்காடியின் அசத்தல் பேக்கேஜ்!

தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ABOUT THE AUTHOR

...view details