யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் உள்ள பியூரின்களின் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனமாகும். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருள். இது பொதுவாக சிறுநீர் வழியாக வெளியேறும். ஆனால், சிறுநீரின் மூலம் வெளியேற முடியாத போது தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நிலை 'ஹைப்பர்யூரிசிமியா' (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, கடுமையான கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கல் பிரச்சனை போன்ற உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் 6 இலைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..
கறிவேப்பிலை :சாப்பிடும் போது, பலரும் தட்டில் இருந்து ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலை, ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஏராளமான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலை உதவுகிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
துளசி இலைகள்:ஆயுர்வேதத்தில், துளசி இலைகள் இருமல் தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. துளசியின் சில மூலக்கூறுகள் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இது இயற்கையான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் உற்பத்தியைத் தூண்டி உடலில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்குகிறது. இந்த நன்மைகளைப் பெற, தினமும் 10-15 இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும்.
அஸ்வகந்தா:ஆயுர்வேதத்தில் இரண்டாவது அதிகப்படியாக பயன்படுத்தப்படும் மூலிகை இது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மூட்டுவலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பாகற்காய் இலை:நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமே பாகற்காய் என்று ஒரு தவறான கருத்து உள்ளது. ஆயுர்வேதத்தில் பாகற்காய் மட்டுமின்றி அதன் இலைகள் மற்றும் விதைகளும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பாகற்காய் இலைகள் இரத்தத்தை சுத்திகரித்து அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.