அழகாக இருக்க வேண்டும் என்று யார் தான் நினைப்பது இல்லை? முகத்தை அழகாகவும் , பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள பலவிதமான க்ரீம், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் மாஸ்குகளை பயன்படுத்துகிறோம். ஆனால் முகம் பளபளக்க வேண்டுமானால் கழுத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
சிலருக்கு கழுத்து பகுதி கருமையாக காணப்படும். அதற்கு, உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கழுத்து கருப்பாக இருப்பதால் முகம் அழகையும் அது கெடுக்கிறது. இப்படியான சூழ்நிலையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கழுத்து கருமையை நீக்குவதற்கான டிப்ஸ்களை காணலாம்..
கடலை மாவு மற்றும் எலுமிச்சை: கடலைமாவு மற்றும் எலுமிச்சை கழுத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு, கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்டை கழுத்தில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இதே போல, தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருமை நிறம் நீங்க ஆரம்பிக்கும்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு: தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை சிறிதளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின் உலர்ந்ததும் கழுவுங்கள். இது கழுத்தை ஈரப்பதமாக்குவதோடு சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றுகிறது.
எலுமிச்சை சாறு:பஞ்சில் எலுமிச்சை சாற்றை நனைத்து கழுத்து பகுதியில் நன்றாக தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுபான நீரில் கழுத்தை கழுவுங்கள். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வருவதன் மூலம் கழுத்து பகுதியில் உள்ள கரும்புள்ளி நீங்குகிறது.