மூக்கிற்கு பதிலாக வாய் வழியாக சுவாசித்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனித உடலியல் வடிவமைப்பின் படி, நமது மூக்கு மற்றும் வாய் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூக்கு மற்றும் வாயின் செயல்பாடுகள்: மூக்கு மற்றும் வாய், இந்த இரண்டின் செயல்பாடுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. மூக்கு வழியாக நாம் உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறோம், அதே நேரத்தில் வாய் வழியாக உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்கிறோம். மூக்கின் முக்கிய செயல்பாடு அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இல்லாமல் சுவாசிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வாய் உணவை வயிற்றில் நுழைய அனுமதிக்கிறது மற்றும் உமிழ்நீர் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
வாய் வழியாக சுவாசித்தால் என்ன நடக்கும்?: வாய் வழியாக சுவாசிப்பது முகத்திலுள்ள எலும்புகளின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், மூக்கு வழியாக சுவாசிப்பதை விட வாய் வழியாக சுவாசிப்பது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இதன் காரணமாக செல்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்படலாம் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். கூடுதலாக, வாய் வழியாக சுவாசிப்பது விரைவில் முதுமை தோற்றத்திற்கு வழிவகுக்கின்றது.
மூக்கின் வழியாக சுவாசியுங்கள்:நாம் சாப்பிடுவதற்கு வாயைப் பயன்படுத்துவதைப் போலவே, மூக்கை சுவாசிக்க பயன்படுத்துகிறோம். காற்றில் உள்ள மாசுக்களை வடிகட்டுவதற்கு சிலியா என்ற சிறப்பம்சம் நமது சுவாசப் பாதையில் உள்ளது.
சிலியா என்றால்?:இது, செல்களில் மேற்பரப்பில் காணப்படும் முடி போன்ற, ஊசிமுனையை விட சிறய அமைப்பு. நமது சுவாசக்குழாயில் உள்ள மியூகோசா எனப்படும் சளி சவ்வில் இந்த சிலியா ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இவை, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசு துகள்களை வெளியே தள்ளுகிறது.