ஹைதராபாத்:இந்தியாவில் அனைத்து வயதிற்கும் உட்பட்ட ஆண்கள், பெண்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான, இரும்பு, கால்சியம், ஃபோலேட் (Folate) நுண்ணூட்டச்சத்துக்களை உட்கொள்வதில்லை என தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் (The Lancet) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆண்களை விட பெண்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்வதில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பெண்களை விட ஆண்கள் துத்தநாதம்(Zinc) மற்றும் மெக்னீசியத்தை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
எதை பற்றிய ஆய்வு:'185 நாடுகளில் 15 நுண்ணூட்டச்சத்துக்களின் (Micro Nutrients) நுகர்வு பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும், சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தாமல் உணவுகள் மூலம் எடுக்கப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் நுகர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது' என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 99.3 சதவீதம் பேருக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பத்தில்லை என்றும் லான்சட் ஜர்னல் தெரிவித்துள்ளது. உலகளவில் 70% அல்லது 5 பில்லியனுக்கு அதிகமான மக்கள் போதுமான அயோடின், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உட்கொள்வதில்லை என்று ஆய்வு தரவு கூறுகிறது.