மாவு அரைக்காமல் 'Instant' ராகி இட்லி செய்யலாமா? வெறும் 20 நிமிடம் போதும்! - INSTANT RAGI IDLY RECIPE IN TAMIL - INSTANT RAGI IDLY RECIPE IN TAMIL
INSTANT RAGI IDLY RECIPE IN TAMIL: நீங்கள் சாப்பிடும் இட்லி மென்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சத்தானதாக இருக்க வேண்டாமா? நிமிடங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் இந்த Instant ராகி இட்லியை செய்து சாப்பிடுங்கள்..
ஹைதராபாத்:தென் இந்திய மக்களின் பிரியமான மற்றும் பிரதான உணவுகளில் ஒன்று தான் இட்லி. வாரம் இறுதியானால் போதும், பெரும்பாலானோர் ஒரு வாரத்திற்கு தேவையான இட்லி மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுவார்கள். அப்புறம் என்ன? காலை, இரவு என தினமும் இட்லி தான். இப்படி தினமும் சாப்பிடும் இட்லியை கொஞ்சம் டிவிஸ்ட் செய்து சாப்பிட்டால்?
நிமிடங்களில் மென்மையாக, சுவையாக, ஆரோக்கியமாக தயார் செய்யக்கூடிய ராகி இட்லியை செய்து பாருங்கள். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சிறந்த ஆரோக்கிய உணவாகவும் இருக்கிறது. இதை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன? மென்மையாக செய்வது எப்படி? என்பதை இந்தக் கதையில் பார்க்கலாம்.