தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இரத்த சோகையா? தினமும் இதை இரண்டு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்..ஆயுர்வேத வைத்தியம் உங்களுக்காக! - How to Increase Hemoglobin level - HOW TO INCREASE HEMOGLOBIN LEVEL

How to Increase Hemoglobin level naturally: நீங்கள் இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? இரத்தத்தை அதிகரிக்க பல முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லையா? இனி, கவலைப்பட வேண்டாம் ஆயுர்வேதம் முறைப்படி, இந்த மருந்தை ஒரு முறை தயாரித்து சாப்பிட்டு வந்தால் போதும், இரத்த சோகை நீங்கிவிடும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Aug 27, 2024, 1:38 PM IST

ஐதராபாத்:உடலில் இரத்தம் போதுமான அளவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடிகிறது. இல்லையென்றால் இரத்தசோகை ஏற்பட்டு பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் பொதுவானது தான்.

ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் நால்வரில் ஒருவருக்கு இரத்த சோகை இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. இரத்த சோகையை சரி செய்வதற்கு பல முயற்சிகளை எடுத்தும் பலருக்கு அதில் பலன் கிடைப்பது இல்லை. ஆனால், ஆயுர்வேதத்தின்படி, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய மருந்து இரத்த சோகையை நீக்குவதாக ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி கூறுகிறார்.

அப்படி, அது என்ன மருந்து ? அதை எப்படி செய்வது என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மருந்து தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் சாறு - 1 லிட்டர்
  • திப்பிலி பொடி - 125 கிராம்
  • தேன் - 120 மிலி
  • சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - 125 கிராம்
  • சமைப்பதற்கு மண் பாத்திரம்

செய்முறை:

  1. ஃப்ரெஷாக நெல்லிக்காய் இருந்தால், 1 லிட்டர் நெல்லைக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
  2. ஃப்ரெஷான நெல்லிக்காய் இல்லையென்றால், கவலை வேண்டாம். நெல்லிக்காய் சாறு தயார் செய்யுங்கள். அதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கிலோ உலர் நெல்லிக்காய்யை நறுக்கி, 4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கம்மியான தீயில் கொதிக்க விடுங்கள். 4 லிட்டர் தண்ணீர் 1 லிட்டராக வற்றி வந்தவுடன் வடிக்கட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  3. இப்போது திப்பிலி பொடியை தயார் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, திப்பிலியை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதனை பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  4. இப்போது, மண் பாத்திரத்தில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது தயார் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் சாற்றை ஊற்றவும்.
  5. அதன் பிறகு அரைத்து வைத்துள்ள திப்பிலி பொடியை சேர்த்து கலக்கவும்
  6. அதனை தொடர்ந்து, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்
  7. கடைசியாக, தேன் சேர்த்து கலந்து விடவும்
  8. இப்போது, இந்த பானையை ஒரு துணியால் மூடி, காற்று சென்று விடாத அளவிற்கு கயிற்றால் கட்டி விடவும்
  9. இந்த பானையை 15 நாட்களுக்கு தொடாமல் ஓரமாக வைத்து விடுங்கள்

எப்படி சாப்பிடுவது:

  • 15 நாட்களுக்கு பிறகு பானையில் உள்ள கலவையை ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • தினமும் காலையில் அந்த கலவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து சாப்பிட வேண்டும்
  • இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை குறைந்து விடுவதாக கூறப்படுகிறது.

நன்மைகள் பற்றி தெரியுமா?:

நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை இரத்த சோகையை தடுத்து, இரத்த உற்பத்தி செய்ய உதவியாக இருக்கிறது.

திப்பிலி:திப்பிலிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் குணம் இருக்கிறது. மேலும், வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

தேன்: ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள தேனில் இயற்கையாகவே இரத்தத்தை அதிகரிக்கும் பண்பு உள்ளது. மேலும், இது இரத்த சோகையை குறைக்க முக்கிய பங்களிக்கிறது.

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க:

எப்பவும் டயர்டா இருக்கீங்களா?..அப்போ, இது தான் காரணம்..உடனே செக் பண்ணி பாருங்க!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அட்டகாசமான 8 முக்கிய குறிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details