சுவையாகச் சாப்பிட வேண்டும் என விரும்பும் பலரும், அதில் ஆரோக்கியம் இருக்கிறதா? என்பதை நினைவில் கொள்வது கிடையாது. இதனால், உள் உடல் நலன் மட்டுமல்லாமல், வெளிப்புற அழகும் பாதிக்கப்படும். அதில் ஒன்று தான் தோல் சுருக்கம். பொதுவாகவே, 30வது வயதில் தோல் சுருக்கமடைவது இயல்பான மாற்றம் தான். ஆனால், இப்போது இருக்கும் வாழ்க்கை முறை காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுகிறது.
குறிப்பாக, முகம் மற்றும் வெளிப்புறத்தில் தெரியும் தோல் சுருக்கம் அனைவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இந்நிலையில், நீங்கள் முப்பது வயதை கடக்கும் போது, இளமையுடனும், தோலில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க உங்களது இருபதாவது வயது பருவ காலங்களின் பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இதோ!
தண்ணீர் குடிங்க: உடலில் ஏற்படும் 90%க்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு முதன்மையான காரணமாக இருப்பது போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். குறிப்பாக, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான தோல் வறட்சி, கால் வெடிப்பு, முடி உதிர்தல் ஏற்பட காரணம் நமது உடல் நரேற்றமாக இல்லாதது தான். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை நீங்கள் உறுதி செய்தால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருப்பதும் உறுதி.
உடற்பயிற்சியில் ஈடுபங்கள்: யோகா அல்லது உடற்பயிற்சி என அன்றாடம் 20 முதல் 30 நிமிடங்ளை உங்களுக்காக ஒதுக்குங்கள். இதனால், உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் சுவாசிக்கச் செய்யும். இதனால், சருமம் புதுபொலிவு பெருவதோடு 30 வயதிலும் இளமையாக இருக்கலாம்.
உணவில் கவனம்: 20வது வயதை கடந்தவராக நீங்கள் இருந்தால், நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உங்கள் உடலில் பிரதிபலிக்கும். பச்சைக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, எண்ணெய் பலகாரம், கடையில் வாங்கி சாப்பிடுவது என தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உங்கள் சருமத்திற்கு தேவையான வைட்டமின் வழங்குவதால், தோல் பளபளப்பாகவும், பாதுகாப்பாகவும் இருகும்.