சென்னை: நாம் நலமுடன் வாழ, உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. வாயையும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். வாயில் கிருமிகளை வைத்துக்கொண்டு, எத்தனை ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் அது நன்மை தராது. ஆகையினால், வாய் சுத்தம் என்பது மிக முக்கியம். வாய் சுகாதாரம் இல்லையெனில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பலர் வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக பல் துலக்கிய பின், கெமிக்கல் கலந்த மவுத் வாஷ்கள் மூலம் வாயை கொப்பளிக்கின்றனர். இது பற்கள் மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்னைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால், மவுத் வாஷ்களில் உள்ள கெமிக்கல், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோப்புப்படம் (Credits - Getty Images) இதனால் நமது வீடுகளில் கிடைக்கும் இயற்கையான எண்ணெய்களை க் கொண்டு வாய் கொப்பளிப்பது சிறந்த தீர்வாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. வாய்க்குள் நூற்றுக்கணக்கான கிருமிகள், பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. அவற்றை சரியாக அகற்றாவிடில், பல் வலி, சொத்தை பல், வாய் துர்நாற்றம், ஈறு பிரச்னைகள் வரக்கூடும்.
தினசரி ஆயில் புல்லிங் செய்வது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டில் உள்ள எண்ணெய்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பது மார்கெட்டுகளில் கிடைக்கும் மவுத் வாஷ்களை விட சிறந்ததாகவும், பல், ஈறு, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்வதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது.
இதையும் படிங்க:டீயுடன் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவரா நீங்கள்? - அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க! - Tea with Cigarette
ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
- இனிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும், பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்களை அகற்றாததாலும் பல் சொத்தை பிரச்னைகள் ஏற்படுகிறது. எண்ணெயில் உள்ள இழுதிறன் வாயில் சிக்கியிருக்கும் உணவுத்துகள், பாக்டீரியாக்களை அகற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சிலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை ஏற்படும்.
- தினமும் ஆயில் புல்லிங் செய்வது அவர்களுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக்கும்.
- ஆயில் புல்லிங் செய்வது தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளுக்குச் சிறந்த உடற்பயிற்சியாக அமைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயில் புல்லிங் செய்வது எப்படி?ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை வாயில் போட்டு, அதை விழுங்கி விடாமல் நன்றாக கொப்பளிக்க வேண்டும். 5 முதல் 15 நிமிடங்கள் வரை கொப்பளித்து விட்டு பின் துப்ப வேண்டும். பின் தண்ணீர் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்து முடித்த சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு உட்கொள்ளலாம்.
கோப்புப்படம் (Credits - Getty Images) பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்