தமிழ்நாடு

tamil nadu

பாத்ரூம் குழாய்கள் மீதுள்ள கறைகள் மட்டும் போகவே மாட்டேங்குதா?..டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண! - Tips to clean bathroom taps

By ETV Bharat Health Team

Published : 4 hours ago

How to clean taps in home: பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து குழாய்களில் தேய்த்தால் கடினமான கறைகள் கூட நீங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

ஹைதராபாத்:எப்போதும் வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க அடிக்கடி வீட்டை சுத்தம் செய்தாலும், சில இடங்களில் மட்டும் கறைகள் போகவே போகாது. அந்த மாதிரியான இடத்தில் ஒன்று தான் இந்த குழாய்கள். கிச்சன், பாத்ரூம் என அனைத்தும் சுத்தமாக இருந்தாலும் குழாய்களில் உப்பு படிந்து அசிங்கமாக இருக்கும். இந்த கறையை போக்க என்ன தான் தேய்த்து கழுவினாலும் மிஞ்சுவது கை வலி மட்டும் தான்.

ஆனால், இனி கவலை வேண்டாம்..சுலபமாக குழாய்களில் உள்ள கறைகளை நீக்க சூப்பட் டிப்ஸ் உங்களுக்காக..!

எலுமிச்சை சாறு:ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சர்ப் எடுத்து அதில் ஒரு முழு எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்றாக கலந்து விடவும். இப்போது, இந்த கலவையை உப்பு அல்லது அழுக்கு படிந்த குழாயில் தடவி ஸ்க்ரப்பரால் தேய்க்கவும். பின்னர், ஐந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் விடாப்படியான கறைகளும் எளிதாக நீங்கும்.

பேஸ்ட்: பற்களை துலக்க நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் குழாய்களையும் சுத்தப்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அதற்கு, ஒரு பழைய பிரஷில் சிறுது பேஸ்ட்டை தடவி அழுக்கு படிந்துள்ள குழாய்கள் மீது நன்றாக தேய்க்கவும். 10 நிமிடங்களுக்கு பின்னர், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதால் குழாய்கள் பளபளவென ஜொலிக்கும்.

வினிகர்: ஒரு பாத்திரத்தில் சிறுதி வினிகர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை ஸ்பாஞ்ச் அல்லது ஸ்க்ரப்பரால் எடுத்து குழாய்கள் மீது நன்றாக அழுத்தி தேய்க்கவும். பின்னர், ஐந்து நிமிடங்கள் கழித்து குழாய்களை தண்ணீர் ஊற்றி கழுவினால் புதிய குழாய்கள் போல பளிச்சிடும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குழாயில் தேய்தால் பளபளப்பாக இருக்கும் (CREDIT - ETVBharat)

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு:ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை குழாய்கள் மீது தடவி எலுமிச்சை பழம் தோலை வைத்து நன்றாக தேய்க்கவும். இப்படி செய்வதன் மூலம் எளிதாக குழாய்களை சுத்தம் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நாள்பட கறை பிடித்து இருந்த குழாய்களை கூட எளிதாக சுத்தம் செய்யலாம்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details