புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு D-60 என்ற நகர பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி செல்போன் பேசியபடி ஓட்டுநர் ஒருவர் இந்த பேருந்தை ஓட்டிக்கொண்டு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ த்ற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரசு தரப்பு ஓட்டுநரை நான்கு நாள் பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் அந்த ஓட்டுநர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், மீண்டும் ஓட்டுநர் திமுக துண்டை அணிந்தபடி அதே வாகனத்தை செல்போன் பேசியபடி ஓட்டிச் சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கூறிய பேருந்து பயணிகள், “தாங்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக குற்றச்சட்டு வைக்கின்றனர். மேலும் நான்கு நாட்கள் பணியிடை நீக்கம் செய்தும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கழுத்தில் திமுக துண்டை அணிந்து மீண்டும் அவர் செல்போன் பேசியபடி ஓட்டுவது பொறுப்பற்ற செயலாக இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பூணுல் அறுப்பா? - காவல்துறை அளித்த விளக்கம்!