ETV Bharat / state

தூத்துக்குடியில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது! - reels with sickle and sword

தூத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள், வாளுடன் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறுமுகநேரி காவல் நிலையம், கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
ஆறுமுகநேரி காவல் நிலையம், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 9:27 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக அரிவாள் மற்றும் வாளுடன் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இரண்டு வாலிபர்கள் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களது ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களின் பதிவுகளை கொண்டு ஆறுமுகநேரி காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த மீராஷா மரைக்காயர் மகன் சேகுநூர்தீன்(24), சுனாமி காலனியை சேர்ந்த சகாப்தீன் மகன் முத்து மொகுதூம் என்ற ஆசிஃப் அலி(19) ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: "சீசிங் ராஜாவிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை" - சென்னை போலீஸ் விளக்கம்!

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள், வாள் மற்றும் இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், தங்களை பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், ரவுடியாக வலம் வரவேண்டும் என்பதற்கும் சமூகவலைதளங்களில் ரவுடியாக டிரெண்டிங் ஆவதற்கும் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக சேகுநூர்தீன் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இரண்டு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.