சென்னை: சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017ஆம் தேதி இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கியில் சுமார் 240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்துள்ளதாக இந்தியன் வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை ஈடுபட்டதாக அமலக்கதுறை கடந்த 2022இல் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களும், பங்குதாரர்களுமான ஒய்.பி.ஸ்ரிவன் (Y.P.Shiravan), பி. சுஜாதா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: 'நெஞ்சு வலியிலும் படத்துக்காக உழைத்தேன்'- பித்தல மாத்தி பட தயாரிப்பாளர் சரவணன் நெகிழ்ச்சி!
மேலும் இவர்களுக்கு எதிராக அமலாக்கதுறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று ( செப்.23) சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரிவன், சுஜாதா ஆஜராகவில்லை. அவர்களின் சார்பில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்யபட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றப்பத்திரிகை நகல் பெற ஒய்.பி.ஸ்ரிவன், பி.சுஜாதா இருவரும் அக்டோபர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.