ஹைதராபாத்: வீட்டில் சில மரங்களை வளர்ப்பதால் செல்வமும், வளமும் பெருகும் என இந்தியாவின் பழங்கால கட்டிடக்கலை அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. அதே போல, வீட்டிற்குள் சில செடிகளை வளர்ப்பதால் மனம்,வளம் எல்லாம் செழிக்கும் எனவும் பலரால் நம்பப்பட்டு வருகிறது. இது போன்றவை மேல் நம்பிக்கை உள்ளவர்களும் தங்களது வீடுகளில் சில குறிப்பிட்ட செடிகளை வளர்த்தும் வருகின்றனர். அப்படி, நமக்கும் நாம் வசிக்கும் வீட்டிற்கும் செல்வத்தையும் வளத்தையும் தரக்கூடிய ஆறு செடிகளை பற்றி தெரிந்து கொள்வோம்..
துளசி: இந்தியாவில் பலரது வீடுகளில் வளர்க்கப்படும் இந்த துளசி செடிகளில் ஆண்டிஹைபேக்சிக் விளைவு இருப்பதால் மன அழுத்தத்தை குறைத்து சுற்றுப்புறச்சூழலை புத்துணர்வாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், துளசி புனிதமான மற்றும் அதிர்ஷடத்தை தரக் கூடியது என பலரால் நம்பப்படும் நிலையில் வீட்டில் பாசிடிவ் எனர்ஜியை தக்கவைக்க துளசி செடி வளர்க்கலாம்.
மருத்துவ குணம் நிறைந்த இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பது சுலபம் தான். இதற்கு சூரிய ஒளியை ஈர்த்துக்கொள்ளும் தன்மை உள்ளதால் வீட்டில் எங்கு வேண்டுமானலும் இந்த செடியை வளர்க்கலாம்.
மணி பிளான்ட்: வீட்டிற்குள் வளர்க்கும் பிரபலமான செடிகளில் ஒன்றான மணி பிளாண்ட் காற்றில் உள்ள மாசுக்களை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த செடியை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் அதிர்ஷ்டம், வளம், பணம் கிடைக்கும் எனவும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மூங்கில்: பொதுவாக காடுகளில் வளரும் இந்த மூங்கில் செடி அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வாஸ்து மற்றும் ஃபெங் சுயி என்னும் சீன சாஸ்திரம் ஆகியவற்றுடன் இந்த மூங்கில் செடி தொடர்புகொண்டுள்ளது. இது செல்வத்தையும் வளத்தையும் தருவதாகவும் அறைக்குள் வைப்பதால் நல்ல நேர்மறையான ஆற்றலை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: இதை தெரிஞ்சுக்காம 'Frozen' காய்கறிகளை சமைக்காதீங்க..முழு சத்தும் கிடைக்க கவனமாக இருங்கள்!
கற்றாலை: சரும பராமரிப்பிற்கும் மருத்துவ குணங்களுக்கும் பெயர் போன கற்றாலை பெரும்பாலானோர் வீட்டில் வளர்க்கப்படுகிறது. அதிக பராமரிப்பு தேவைப்படாமல் இருக்கும் கற்றாலை செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் எதிர்மறையான எண்ணங்களை நீக்குகிறது. அதிமட்டுமல்லாமல், சரியான திசையில் கற்றாலையை வளர்ப்பதன் மூலம் மகிழ்ச்சி, செல்வம் மற்றம் அதிர்ஷடம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஸ்நேக் செடி: வீட்டில் இன்டோர் பிளான்டாக இந்த செடியை வளர்க்கும்படி நாசா பரிந்துரைத்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? இதற்கு காரணம், இது மாசடைந்த காற்றை சுத்தப்படுத்த உதவுவது தான். அதுமட்டுமல்லாமல், ஸ்நேக் பிளான்ட்டை வீட்டிற்குள் அல்லது வேலை செய்யும் இடத்திலோ வைத்து வளர்த்து வந்தால் சந்தோஷமான மனநிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்பைடர் பிளான்ட்: ஸ்பைடர் செடிகள் சுற்றுச்சூழலில் அழுத்தத்தை குறைக்க உதவுவதோசு மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோனை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோபம், பதட்டம்,பதற்றம், மனசோர்வு என மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இதனால் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.
இதையும் படிங்க: உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சிகள் ஓடி விளையாடுகிறதா? 'இதை' தெளித்தால் மீண்டும் வரவே வராது..!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்