தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை Pad-ஐ மாற்ற வேண்டும்? மருத்துவர் விளக்கம்! - how often we should change pad - HOW OFTEN WE SHOULD CHANGE PAD

how often we should change pad: பீரியட்ஸின்போது, நீங்கள் எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கினை மாற்றுகிறீர்கள்? 6 மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்தால் சிக்கல் என்கிறார் எஸ்.ஆர்.எம் குலோபல் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Sep 5, 2024, 5:25 PM IST

ஹைதராபாத்:மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் இடுப்பு, கால்,வயிறு,முதுகு வலி ஒரு புறம் ஆளையே வலுவிழக்கச் செய்கிறது என்றால் மறுபுறம் நாம் பயன்படுத்தும் துணி, நாப்கின்,மென்சுரல் கப் அசெளகரியத்தை தந்து, மேலும் நம்மை இன்னலில் ஆழ்த்துகிறது.

இப்படியான சூழலில், நாம் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்கிறார் எஸ்.ஆர்.எம் குலோபல் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சஸ்வதி. நாப்கினை எத்தனை மணி நேரம் வரை பயன்படுத்தலாம்?, பீரியட்ஸின்போது வரும் அலர்ஜியை தடுப்பது எப்படி? , மென்சுரல் கப் சிறந்ததா? போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் கூறும் பதிலை பார்ப்போம்.

நாப்கினை எத்தனை மணி நேரம் வரை பயன்படுத்தலாம்?: பீரியட்ஸின்போது பெரும்பான்மையான பெண்கள் நாப்கினை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை நாப்கினை மாற்றுகிறார்கள் என்பது தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டியதாக இருக்கிறது.

காரணம், சிலர் நாப்கின் முழுமையாக நனைகிற வரை மாற்றுவதில்லை, சிலர் இரவில் படுக்கச்செல்லும் போது வைக்கும் பேடை அடுத்த நாள் குளிக்கும் வரை மாற்றுவது கிடையாது. ப்ளீடிங் அதிகமிருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்குள் பேடை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சஸ்வதி. இல்லையென்றால், அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்.

காட்டன் /சிந்தெட்டிக் பேட்?: ரசாயனம் கலந்த, நறுமணங்கள் நிறைந்த, சிந்தெட்டிக் என பல வகையான நாப்கின்கள் மார்கெட்டில் இப்போது கிடைக்கின்றன. ஆனால், வாசனையற்ற மற்றும் காட்டன் பேடுகளை பயன்படுத்துவது தான் சிறந்தது என்கிறார் மருத்துவர்.

Rashes-ஐ தடுப்பது எப்படி?:மாதவிடாய் நாள்களில் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பும், எரிச்சலும் பொதுவானவை தான். இந்த சமயங்களில், டஸ்டிங் பவுடர், தூங்குவதற்கு முன்னதாக, ஆன்டி ஃபங்கல் க்ரீம் (Anti Fungal Cream) பயன்படுத்தலாம். ரசாயனம் இல்லாத நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். மேலும், உள்ளாடடைகளை தளர்வாக அணிவதன் மூலம் இந்த பிர்ச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

துணி...நாப்கின்..மென்சுரல் கப் எது சிறந்தது?:

மென்சுரல் கப்: சிலிக்கான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் செய்யப்படுவது தான் இந்த மென்சுரல் கப். இதன் பயன்படுத்தும் வழிமுறையைச் சரியாகத் தெரிந்து கொண்டால், மாதவிடாய் காலம் சுலபமாக மாறுகிறது என்கிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இதனை ஒரு முறை வாங்கினால் குறைந்தது 4 முதல் 5 வருடங்களுக்கு பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் சஸ்வதி.

டாம்பான் நேரடியாக பெண்ணுறுப்பில் இன்சர்ட் செய்யப்படுவதால் அது ஆர்கானிக் அல்லது செயற்கை பொருட்களால் செய்யப்படுகிறதா என்பதை ஆராய வேண்டியதாக இருக்கிறது. மேலும், இரவில் 8 மணி நேரத்திற்கு மேலாக இதை வைத்துக்கொண்டு தூங்கினால் பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நாப்கினுடன் ஒப்பிடுகையில், மென்சுரல் கப் சிறந்தது என மருத்துவர்கள் கூறினாலும், இது ஒவ்வொரு பெண்கள் மத்தியிலும் வேறுபடும் என்கின்றார்.

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க:முடி உதிர்கிறதா? நீங்கள் சாப்பிடும் உணவில் இது இல்லாததே முக்கிய காரணம்!

ABOUT THE AUTHOR

...view details