மாநிறம், சிவப்பு என நாம் எந்த நிறத்தில் இருந்தாலும் நம்மில் பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகள் கருமையாக இருக்கும். இதை பற்றி கவலை இருந்தாலும், அதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் எந்த முயற்சியும் எடுப்பது கிடையாது. ஆனால், உங்கள் கை, கால்களில் உள்ள கருமையை நீக்குவதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களே போதுமானதாக இருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்..
- எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து முழங்கை மற்றும் முழங்காலில் நன்றாக தேய்த்து, 5 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் கருமை மறையும். இதை வராத்திற்கு 2 முதல் 3 நாட்கள் செய்து வரும் போது நல்ல பலன் கிடைக்கும்.
- மூன்று ஸ்பூன் தயிர் மற்றும் அதனுடன் சிறிது வினிகர் சேர்த்து கருமை உள்ள இடத்தில் தடவி வந்தால் நிறம் மாறுவதை காணலாம்.
- ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சாறு, பாலாடை, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயார் செய்யவும். இதை, வாரத்திற்கு மூன்று முறை கருமை உள்ள இடத்தில் தடவி ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் கருமை நீங்குவதை காணலாம்.
- க்ரீன் டீ-ஐ பஞ்சில் நனைத்து முழங்கை மற்றும் முட்டிகளில் தினமும் காலை மற்றும் மாலையில் துடைத்து வந்தால் கொஞம் கொஞமாக நிறம் மாற தொடங்கும்
- வெங்காயம் மற்றும் பூண்டு, இதை இரண்டையும் சம அளவில் அரைத்து கருமை உள்ள இடத்தில் தடவலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது
- எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கருமை உள்ள இடங்களில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் நாள்பட கருமை நிறம் மங்குவதை காணலாம்
- மஞ்சள், தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முழங்கை மற்றும் முழங்கால் மூட்டுகளில் தேய்க்கவும். இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் படிப்படியாக கருமை நீங்கும்
- தேங்காய் எண்ணெயுடன் ஆவாரம்பூ சேர்த்து நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் கருமை மறையும்
- சோற்றுக்கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 அல்லது 5 நாட்களுக்கு தடவி வந்தால் நாள்பட கருமை படிப்படியாக குறையும்
- ஒவ்வொரு முறையும், முழங்கை அல்லது கால்களில் உள்ள கருமையை நீக்க புது பேக் அப்ளை செய்த பின்னர் கண்டிப்பாக மாய்சுரைசர் தடவ வேண்டும். இப்படி செய்வதால், தோல் மென்மையாக மாறும்.