தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

பட்ஜெட் குடும்பத்தின் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு- இதை செய்றீங்களா நீங்க?.. UNICEF கூறும் வழிகாட்டுதல்கள்.. - UNICEF TIPS ON EASY CHILDREN FOODS

CHILDREN FOOD HABIT: குழந்தைகளின் ஆரோக்கியம் தான் அவர்களின் ஆற்றலையும் அறிவையும் முடிவு செய்கிறது, இவ்வாறு முக்கியத்துவம் பெறும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விலைவாசி உயர்வு காரணமாக குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என எளியமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றி UNICEF வழங்கிய வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (PHOTO CREDITS- UNICEF Official Website)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 10:46 PM IST

சென்னை:குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்பார்கள், அந்த கலையின் முக்கியமான அம்சம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது. இந்த ஆரோக்கியத்திற்காகப் பெற்றோர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உணவு பழகத்தை உருவாகிறார்கள் அல்லது வேலைக்குச் செல்லும் தாயும், தந்தையும் தங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து உணவுப் பழக்கத்தை வகுக்கிறார்கள். இவ்வாறு பணம் மற்றும் நேரத்தின் காரணமாக இனி உங்கள் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் சார்ந்த ஆரோக்கிய தேவையைப் பூர்த்தி செய்யாமல் விடாதீர்கள்.இதற்கென ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) பட்ஜெட் ஃப்ரெண்ட்லி மற்றும் எளிய முறையில் ஆரோக்கியத்தை அளிக்கும் மாற்று உணவுப் பழக்கத்தை எப்படி மேற்கொள்வது என 5 வழிமுறைகளை தந்துள்ளனர்.

1. ஃப்ரெஷ்பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குங்கள்:உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவதை விட வீட்டு சமையலை சாப்பிடுவது பொதுவாகப் பணத்தை மிச்சப் படுத்துவதுடன் அதிக அளவு ஆரோக்கிய உட்டச்சத்து அடங்கியது என்பார்கள். அதிலும் அன்றாட சமைப்பதற்குப் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி, சேமித்துச் சமைப்பதுதான் சவால். நாம் எப்படி உணவகங்களில் உணவுகள் அன்றாட செய்யப்படுவதுதானா ? என ஆரோக்கியத்தின் பேரில் சிந்திக்கிறோமோ அதேபோல் வீட்டிலும் குழந்தைகளுக்கு அன்றாட ஃப்ரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு உணவை சமைப்பது அவசியம். குழந்தைகளின் உணவில் சாதம் மற்றும் தோசை, இட்லிகளைவிட முடிந்தவரைப் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் காய்கறிகளைச் செய்தால் அவற்றைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுடன், வழக்கத்தை அதிகமாகவும் சாப்பிடுவார்கள். இதற்குச் சிறந்த வழியாகக் காய்கறிகளில் சூப்கள் மற்றும் காய் கஞ்சியாகச் செய்து தரலாம். அவ்வாறு செய்வதன் மூலம் நேரத்தை மிச்சம் படுத்துவதுடன் அவற்றை உறைந்த பின்னர் விரைவாக மீண்டும் சூடுபடுத்தியும் வெகுநேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையைக் குறையாமல் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும்.

2. ஃப்ரெஸ் இல்லையென்றால் உலர்ந்தவைக்கு மாறுங்கள்:குழந்தைகளின் உணவில் ஃப்ரெஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதற்கு மாற்றான ஆரோக்கிய பொருட்கள் ஏதும் இல்லை . ஆனால் அன்றாட ஃப்ரெஸ் காய்கறிகளை நடைமுறையில் வாங்க முடியாதவர்கள் உலர் தானியங்களான பட்டாணி, கொண்டைக்கடலைகளைப் பயன்படுத்தலாம். இவை ஆரோக்கியத்தைப் பூர்த்தி செய்வதுடன் மாதக்கணக்கில் சேமித்துச் சமைப்பதற்கு ஏதுவானவை. மேலும் இவற்றில் பல விதமான உணவுகளைத் தயாரிக்கவும் முடியும்.

அதேபோல் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளையும் பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் வகை மீன்களான மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்துள்ளன. மேலும் இவற்றை இவை சாண்ட்விச்கள், சாலடுகள் அல்லது பாஸ்தா போன்று சூடான உணவிலோ அல்லது குளிச்சியான உணவு வகையாகவோ குழந்தைகளைக் கவரும் வகையில் செய்ய முடியும்.

பல நாட்களாகச் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தக்காளி, மிளகாய்களைவிட இந்த உலர்ந்த தானியங்களில் ஆரோக்கியம் அதிகமாக இருக்கிறது. எனவே உலந்த உணவுப்பொருட்கள் தேர்வில் பட்டாணி, பருப்பு , அரிசி வகைகளான கூஸ்கஸ் அல்லது குயினோவா போன்ற தானியங்கள் சத்தான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் பொருட்களாக இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்குப் பால் மற்றும் ஓட்ஸ் சிறந்த காலை உணவுக்குச் சரியான தேர்வாக இருக்கும். அல்லது தயிருடன் நறுக்கிய பழங்கள், திராட்சையும்,சேர்த்துச் சாப்பிடுவதும் ஆரோக்கியமானது.

3. தின்பண்டங்களாக என்ன தரலாம்?குழந்தைகள் ஒரு நாளில் ஒன்றிலிருந்து இரண்டு முறையாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவார்கள். அவற்றைக் காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையாகப் பிரித்துக்கொள்ளலாம். அப்போது கண்களுக்கு ஈர்ப்புடன் இருக்கும் ஆரோக்கியமில்லாத தின்பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அதிக இனிப்புகள் அல்லது உப்பு நிரம்பிய தின்பண்டங்களை உண்ணாமல் மாற்றாக நட்ஸ், பாலாடைகள், தயிர் , நறுக்கிய அல்லது உலர்ந்த பழங்கள், வேகவைத்த முட்டைகள், மேலும் தமிழகத்தின் பழக்கபடி செய்யப்படும் சத்தான பலகார வகைகளைத் தின்பண்டங்களாகத் தரலாம். குழந்தைகள் வளரும் போது உணவு பழக்கத்தில் மாற்றம் அடையும் வாய்ப்பு இந்த வகை தின்பண்டங்களின்மைதான் உள்ளது. எனவே இவற்றைச் சத்தானதாகவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவு தேர்வைத் தருவதாக இருக்க வேண்டும்.

4. பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பை.. பை. சொல்லுங்கள்:ஆங்கிலத்தில் Processed foods என அழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஷாப்பிங் பட்டியலில் இருந்து விலக்குங்கள். குழந்தைகள் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்க வேண்டும். பாட்டிலில் அல்லது பாக்கேஜில் அடைக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகப்படியான இனிப்பு சிரப் அல்லது உப்புகள் சேர்க்கப்படுகின்றன. இவை நிறைவுற்ற கொழுப்புகள் அதாவது ஆங்கிலத்தில் Saturated Fat எனப்படும் குறைந்த கறையும் தன்மை கொண்ட கொழுப்புகள். இவை இதயத்திற்கு இரத்தை அனுப்பும் தமனிகளை அடைத்துவிடும் அபாயம் கொண்டவை. எனவே நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கினால், லேபிளில் குறிப்பிட்டிருக்கும் கொழுப்பு வகையைப் பார்த்து குழந்தைகளுக்கு வாங்கி தரவேண்டும். பொதுவாக குழந்தைகளுக்குத் தண்ணீர் சத்து நிரம்பிய பழங்களான எலுமிச்சை, வெள்ளரி ,பெர்ரி போன்ற பழங்கள் அல்லது தண்ணீர் சத்துகள் அதிகமாக இருக்கும் காய்கறிகளைச் சேர்ப்பது கூடுதல் சுவையுடன் ஆரோக்கியத்தையும் தருகிறது.

5. சமைப்பதிலிருந்து சுவைப்பதுவரை குழந்தைகளுக்குச் சுவாரசியமாக்குங்கள்:பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தூங்குவது, குளிப்பது போல் சமைப்பதையும் அன்றாட தேவையாகக் கற்றுக்கொடுப்பது நல்லது. குழந்தைகளுடன் இணைந்து பெற்றோர்கள் சமைப்பதும் சாப்பிடுவதும் ஆரோக்கியமான குடும்ப பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகள் பெற்றோர்கள் சமைக்கும் நேரத்தில் சிறிய சிறிய வேலைகளான காய்களைச் சுத்தம் செய்வது, வரிசைப்படுத்துவது, போன்ற செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனக் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:டார்க் சாக்லெட்"-ன் டார்க் & ப்ரைட் விஷயங்கள்.. தெரிந்துகொள்வோம்.

ABOUT THE AUTHOR

...view details