சென்னை:"Food coma" என்ற இந்த வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா? இது தான் மதிய உணவிற்குப் பின் உறக்கம் வருவதைக் குறிக்கும் மருத்துவ சொல்லாடல். நம்மில் பலருக்கு மதியம் உணவு உட்கொண்டவுடன் சொடுக்கிக்கொண்டு உறக்கம் வரும். ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கும் என்று தோன்றும். அது மட்டும் அல்ல ஒரு சிலர், "மத்தியம் நல்லா மூக்க முட்ட சாப்டுட்டு ஒரு தூக்கம் போட்டாத்தான் சரியா வரும்" எனச் சொல்லிக் கேட்டிருப்போம்.
இப்படி மதிய உணவுக்கும், உறக்கம் வருவதற்கும் என்ன தொடர்பு? அதிலும் குறிப்பாக, அலுவலகங்களில் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் நபர்கள் பலர் மதிய உணவுக்குப் பின் உறக்கம் வந்து தள்ளாடுவதால் பணியில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைத் தான் மருத்து மொழியில் "Food coma" மற்றும் postprandial somnolence எனக்கூறுகின்றனர். இதன் பொருள் உணவுக்குப் பின் உறக்கம் என்பதாகும்.
"Food coma" உங்களுக்கு உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
- மதியம் உணவு உட்கொண்டவுடன் உறக்கம் வரும்
- உடல் ஆற்றல் இழந்து காணப்படும்
- மூளை அமைதியாக, எதையும் சிந்திக்காமல் இருக்கும்
- எழுந்து வேலை செய்யச் சோர்வாக இருக்கும்
- கண்கள் உங்களை அறியாமல் மூடி மூடி திறக்கும்
- நிம்மதியாகப் படுத்து உறங்கி எழுந்திருக்கத் தோன்றும்