தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உடலை டீடாக்ஸ் செய்யும் எளிய வழிமுறைகள்? இவற்றை ட்ரை செய்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்! - FULL BODY DETOX

உடலில் உள்ள நச்சுக்களையும், தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றுவதற்கான இயற்கையான டீடாக்ஸ் வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

By ETV Bharat Health Team

Published : Dec 29, 2024, 4:04 PM IST

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு கலந்து குடித்து வர வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்கு உதவும். வைட்டமின் சி சத்தால் நிறைந்துள்ள எலுமிச்சை, கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது.

மருத்துவ உணவு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சிட்ரஸ் பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுவதாக தெரியவந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து பருகவும். கூடுதல் நன்மைகளுக்காக, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது சிறிதளவு தேன் சேர்க்கும் போது செரிமானத்தை மேலும் மேம்படுத்துகிறது.

கோப்புப்படம் (Credit - Etv Bharat)

மூச்சுப்பயிற்சி:ஆழமான மூச்சுப்பயிற்சி ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யோகா இதழில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுவாசத்தை கவனிப்பது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது என தெரியவந்துள்ளது.

கோப்புப்படம் (Credit - Etv Bharat)

தினசரி, 5-10 நிமிடங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும். நான்கு எண்ணிக்கைக்கு மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, நான்கு எண்ணிக்கை வரை பிடித்து, ஆறு எண்ணிக்கைக்கு மெதுவாக மூச்சை வெளியே விடவும். இது மனதை டீடாக்ஸ் செய்து நாள் முழுவதும் மன நிம்மதியுடன் இருக்க உதவுகிறது.

உடற்பயிற்சி: தினசரி ஏதாவது ஒரு வகையில் உடல் செயல்பாடு இருந்தால் அவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஸ்ட்ரெச்சிங், யோகா, விறுவிறுப்பான நடை என தினசரி குறைந்தது 10 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், வியர்வை மூலம் நச்சுக்கள் வெளியேறுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கப்படுவதோடு கல்லீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜியின் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

கோப்புப்படம் (Credit - Etv Bharat)

மூலிகை டீ: கிரீன் டீ, இஞ்சி அல்லது டேன்டேலியன் ரூட் போன்ற மூலிகை தேநீர் உங்கள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும். கிரீன் டீயில் உள்ள கேடசின்கள், கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன என்று ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஜர்னலின் ஆய்வு குறிப்பிடுகிறது. இஞ்சி, செரிமானத்திற்கு உதவுவதால், தினசரி காலையில் இஞ்சி தேநீர் குடிக்கலாம். நீங்கள் குடிக்கும் தேநீரில் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதை நினைவில் வைக்கவும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: உடலில் உள்ளநச்சுத்தன்மையை நீக்குவதற்கு ஆரோக்கியமான குடல் இயக்கம் மிகவும் அவசியம். குடல் இயக்கம் சீராக செயல்பட நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, நார்ச்சத்து நச்சுகளை பிணைக்க உதவுகிறது மற்றும் குடல் இயக்கங்கள் மூலம் அவற்றை அகற்ற உதவுகிறது என தெரிவித்துள்ளது. பழங்கள், முழு தானியங்கள் மற்றும் விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க:

கல்லீரலை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய்..3 நாட்களுக்கு இப்படி பயன்படுத்துங்க!

உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details